Header Ads



சவூதி அரேபியாவில் உண்மை மார்க்கத்தை விளங்கி வந்த 6 சகோதரர்கள்..!

(சுவனப்பிரியன்)

வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை எட்டிய கம்பெனி 'அரேபியன் உத்'. இந்த கம்பெனியின் முக்கிய பொருப்புகளில் பணியாற்றும் 6 வெளிநாட்டவர்கள் தங்களின் வாழ்வை இஸ்லாத்தோடு இணைத்துக் கொண்டுள்ளனர். ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் தலைமையில் இந்த மன மாற்றம் நிகழ்ச்துள்ளது. கம்பெனியின் செலவில் மார்க்க விளக்கங்களை ஓய்வு நேரங்களில் நிகழ்த்துவது வழக்கம். விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். எவரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. 

இந்த தாவா நிகழ்ச்சியின் மூலம் குர்ஆனை படித்து விளங்கி தங்களின் வாழ்வியலாக இந்த ஆறு பேரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இது போன்று இதற்கு முன்னும் பல மாற்று மதத்தவர்கள் இதே கம்பெனியில் தூய இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இந்த கம்பெனியின் நிர்வாகிகள் சம்பளத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாது தனது வேலையாட்கள் சிறந்த வாழ்வியலை தனது நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மிக சிரத்தை எடுத்து பல ஆக்கபூர்வ பணிகளை செய்து வருகின்றனர். 

இஸ்லாத்தை ஏற்ற இந்த ஆறு பேரும் 'எங்களின் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் இவை. குர்ஆனின் அனைத்து கட்டளைகளையும் மிக சிறப்பாக பாடங்களாக கொடுக்கப்பட்டு எங்களுக்கு போதிக்கப்பட்டது. இந்த சிறந்த வாழ்வு கிடைத்தற்காக இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்' என்றனர். 

இந்த கம்பெனியின் பொது மேலாளர் பந்தர் சங்கூரா கூறும்போது 'புதிதாக தங்கள் வாழ்வை இஸ்லாத்தோடு இணைத்துக் கொண்ட இந்த சகோதரர்களை வாழ்த்துகிறோம். இந்த மாற்றமானது இவர்களின் வாழ்நாள் முழுக்க தொடர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். எங்களது நிறுவனமானது இஸ்லாமியரையும், இஸ்லாம் அல்லாதவர்களையும் இணைத்து ஒரு சகோதரத்துவத்தை உருவாக்குகிறோம். இஸ்லாத்தின் சகிப்புத் தன்மை என்ன என்பதையும் இவர்களுக்கு புரிய வைக்கிறோம்.

குர்ஆனின் கட்டளைகள் என்ன என்பதையும் நபிகள் நாயகத்தின் வாழ்வு முறை எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆறு பேரும் மிக சிறப்பாக விளங்கி வைத்துள்ளனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள எங்களது நிறுவனம் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வருகிறது' என்றார்.

தகவல் உதவி - சவுதிகெஜட்

No comments

Powered by Blogger.