காபன் பாதச்சுவடு – CARBON FOOT PRINT
(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)
நாம் வாழும் இந்த பூமியிடம் நாம் கடன் வாங்கியே பழக்கப்பட்டிருக்கிறோம்,நமது வாழ்க்கையோ இரவல் வாழ்க்கை. நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையா நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இல்லை முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையையே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .
அன்று நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு மாட்டு வண்டி கட்டி பிரயாணங்கள் செய்தார்கள் இன்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி கார்களும்,வான்களும்,காலத்தின் தேவை இது யாரையும் குறைசொல்லவும் முடியாது முன்னேறுகின்ற உலகத்திற்கு நிகரான வேகத்தில் மனிதனும் வேகமாக உருண்டோட வேண்டியிருக்கின்றது,இது நாகரீகம் நமக்கு கொடுத்த பரிசு தூக்கி எறிய யாருக்கும் விருப்பமில்லை,தூக்கி எறிந்தால் கஷ்டம்,நமது ஒவ்வொரு செயல்பாட்டின் மூலமும் நாம் இந்த உலகத்திலிருந்து வளங்களை நுகர்கின்றோம் அதற்கு பிரதி உபகாரமாக நாம் நாம் நமது வளிமண்டலத்திற்கு காபனீர் ஒட்சைட்டு வாயுவையும் C H 4 வாயுவையும் கொடுக்கின்றோம்.இவ்வாறு நமது நாளாந்த நடவடிக்கைகள் மூலம் நாம் வெளிவிடும் காபனீர் ஓட்சைட்டின் அளவையும்,காபனின் நுகர்ச்சியையும் கணித்த சூழலியலாளர்கள் அதனை காபன் சுவடு (CARBON FOOTPRINT) என்று அழைக்கின்றார்கள் .
நாம் இன்று பயன்படுத்தும் ,குளிர்சாதாப்பிட்டி,வளிச்சீராக்கி, காகிதங்கள்,கணணி ,நாம் அருந்துகின்ற தேநீர்,பொதியிட்டுவிட்டு வீசுகின்ற ஒவ்வொரு பொருட்களும் காபன்சுவட்டை பதித்துக்கொண்டுதான் இருக்கின்றன.இவற்றில் சில இயற்கையுடன் இணைந்து காபன் வட்டத்துடன் சேர்ந்து சுழல்கின்றன. வாயுக்கள் வளிமண்டலத்தை அடைந்து மிதமிஞ்சி வழிகின்றன.
இவ்வாறு சூழலில் சேருகின்ற காபநீரோட்சைட்டை இயற்கையாக மரங்களே உறுஞ்சி உயிர்வாழ்ந்து நமக்கு நன்மை வழங்கின , இருந்த காடுகளை அழித்து விட்டோம் எஞ்சியிருக்கின்ற மரங்கள் உறுஞ்சும் அளவை விட வளிமண்டலம் அதிக காபநீரோட்சைட்டை கொண்டதாக காணப்படுகின்றது.இதனால் சூரியனில் இருந்து வரும் வெப்பக்கற்றைகளை அவை உறிஞ்சி புவிக்குள்ளேயே தெறிக்க வைக்கின்றன ,இந்நிலை பூகோளத்தை முன்னிலும்பார்க்க அதிகளவிலான வெப்ப நிலைக்கு உயர்த்தி இருக்கின்றது. சூரியக்கதிர்கள் புவிக்கோளத்தில் உட்புறத்தெறிப்புக்குள்ளாகி மனிதர்களும் விலங்குகளும் பல தீய விளைவுகளை நுகர வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.கேள்விப்பட்டிராத புதுப்புது வியாதிகளும் உருவாயிருக்கின்றன.
மட்டுமன்றி மழை குறைந்திருக்கின்றது, துருவப்பிரதேசத்துப் பனிப்பாறைகள் உருக துவங்கிவிட்டன சமுத்திரங்களின் நீர்மட்டம் அதிகரித்து கண்டங்கள் அமிழ்ந்து கொண்டிருக்கின்றன..இந்த மாற்றங்கள் திடீரென நடைபெறாமல் சிறிது சிறிதாக மிக குறைந்தளவாகவே(MICRO CHANGE) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.நீங்கள் சற்று காலத்தால் பின்னோக்கிச்சென்று சிந்தித்து பாருங்கள் ,அன்று கிடைத்த மழைவீழ்ச்சி இன்று கிடைக்கிறதா? அன்று எறித்த வெய்யிலா இன்று எறிக்கிறது நெருப்பல்லவா கொட்டுகிறது,புற்று நோய்களால் இன்று எத்தனை பேர் பாதிகப்பட்டிருக்கின்றார்கள் ?
இதற்கெல்லாம் காரணம் நவீன விஞ்ஞானம் என்ற கோட்டுபோட்டுக்கொண்டு நாமெல்லாம் நாளாந்தம் வாழ்கின்ற நாகரிக வாழ்க்கைதான்.
வந்தது வந்தது தான் உடைந்த கண்ணாடியை ஓட்ட முடியா விட்டாலும் இருக்கின்ற கண்ணாடியை உடையாமல் காக்கலாம்தானே?அதற்காக நாம் அனைவரும் எந்தளவு நமது வளங்களின் பாவனையை குறைக்க முடியுமோ அந்தளவு குறைக்க வேண்டும்,பெட்ரோல்,எரிவாயு,மண்ணெண்ணெய்,டீசல் என்பவற்றின் மூலமாகவே அதிக காபநீரோட்சைட்டு வளிமண்டலத்தை அடைகிறது என்பதால் அவற்றின் பாவனையை குறைப்போம்,முடியுமானவற்றை நடைமுறைப்படுத்துவோம்,தனி வாகனங்களுக்கு பதிலாக பொதுப்போக்குவரத்து அல்லது இணைந்த போக்குவரத்து சேவைகளை ஈடுபடுத்துவோம்,,பழுதடைந்த பொருட்களை வீசி விடாமல் திருத்திப்பயன்படுத்துவோம்,மீண்டும் பாவிக்கக்கூடிய பொருட்களில் இருந்து உச்சக்கட்ட பயன் அனுபவிப்போம்.மீழ்சுளற்ச்சி செய்யக்கூடிய பொருட்களை மீள் சுளற்ச்சி செய்வோம்.
பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவினைக்குறைப்போம்,நீர் வீண் விரயமாவதை தவிர்ப்போம்,வீட்டில் பகல் நேரங்களில் ஜன்னல்களைத்திறந்து வைத்து காற்றோட்டத்தையும்,வெளிச்சத்தையும் பெறுவோம்.
குளிரூட்டிகளின் பாவைகளை குறைப்போம் ,குளிரூட்டிகள் உள்ள அறைக்கதவுகளை திறந்தவுடன் மூடுவோம்,அவ்வறைகளின் திரைச்சீலைகளை மூடியே வைப்போம்,குளிர்சாதனப்பெட்டிகளை இரவு வேளைகளில் நிறுத்தி வைப்போம் அவற்றின் கதவுகளை திறந்தவுடன் மூடுவோம்.இயல்பாகவே அழியக்கூடிய குப்பைகளை . எரிக்காமல் அவற்றை இய்ர்கைப்பசளையாக மாற்றி மண்ணிலே புதைப்போம்.செயற்கை பசளைகளுக்கு பதிலாக இயற்கை பசளைகளை பாவிப்போம்.
சூரிய சக்திமூலம் மின்சாரம்,காற்றுமூலம் ,கடலலை மூலம்,நீர் மின்சாரம் போன்ற திட்டங்களை முன்னெடுப்போம், முடியுமானவரை துவிச்சக்கர வண்டிகளை குறுகிய தூரப்பயணங்களுக்கு பயன்படுத்துவோம்,மரங்களை நடுவோம்,இருக்கின்ற மரங்கள் அழிக்கப்படுவதை தவிர்ப்போம்.
இவ்வாறான இன்னும் இதில் குறிப்பிடப்படாத சூழலுக்கு நட்பான செயல்பாடுகளை நாளாந்த வாழ்கையில் கடைப்பிடிப்போம் எனின் நமது சூழல் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும்,இது தனியே ஒருவரால் மட்டும் செய்தால் நிறைவேறாது,ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்நாளில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான விடயங்களை பின்பற்றி நடக்கும்போது ஓரளவு நமது காபன் சுவட்டினை குறைக்கலாம்.நாம் நுகர்ந்த வலங்களை நம் பிள்ளைகள் நுகரவும் பேரப்பிள்ளைகள் அனுபவிக்கவும் கூடாதா?
.jpg)
Post a Comment