பொதுபல சேனா இந்த சவாலை ஏற்குமா..?
பெளத்த சாசனத்திற்கு விரோதமான அனைத்து கசினோ சூதாட்ட விடுதிகளையும் நாம் முற்றுகையிட முனைந்தால் எங்களுடன் பொதுபலசேனா அமைப்பு இணையுமா? என பகிரங்கமாக சமகி அமைப்பு சவால் விடுத்துள்ளது.
பெளத்த சாசனத்திற்கு விரோதமான கசினோ சூதாட்டத்தை பொதுபலசேனா நிராகரிக்குமேயானால் உடனடியாக மேற்படி சவாலுக்கு பதிலளிக்க வேண்டும். கசினோ சூதாட்டத்திற்காக எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய ஊழியர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமகி அமைப்பின் ஏற்பாட்டாளருமான தினேஷ் தொடங்கொட இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தர்மசக்கரத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி பீடமேறிய மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமானது இந்த நாட்டின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மாத்திரமின்றி பெளத்த சாசனத்தையே இழிவிற்கு உட்படுத்தும் வகையில் இலங்கையில் கசினோ சூதாட்ட நிலையங்களை அரசாங்கம் ஆரம்பித்து வருகிறது. குறிப்பாக கொழும்பின் நகரப் பகுதிகளில் கசினோ சூதாட்ட நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வரலாற்று புகழ்மிக்க கண்டி, அநுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் கசினோ சூதாட்ட நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்கரின் கசினோ சூதாட்டமானது நாட்டின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஒரு சூட்சும விளையாட்டாகும். எனவே, பெக்கரின் சூதாட்டத்தினால் மது, மாது மற்றும் கலாசார ரீதியான சீரழிவுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இச் சூதாட்டத்தினால் விபசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். புத்தபெருமானார் பாவச் செயற்பாட்டின் வாசலாக சூதாட்டத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் பெக்கரின் சூதாட்டத்தினால் கலாசார விழுமியங்களுடன் கூடிய எமது நாடு நாசமாகி விடும். அத்துடன் 1993 ஆம் ஆண்டு சூதாட்டத்திற்கு எதிராக அதிகளவில் பாராளுமன்றில் குரல் கொடுத்தவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையே குறிப்பிட முடியும். அவரே தனதுரையில் எமது கலாசாரத்தை சீரழிக்கும் செயற்பாடே சூதாட்டமாகும் என கூறியுள்ளார்.
எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைத்தால் கசினோ சூதாட்ட சட்ட மூலத்தை கிழித்தெறிய முடியும். இந்நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கசினோ விடுதிகளையும் முற்றுகையிடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்களுடன் முரண்பட்டு காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பிற்கும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். பெளத்த சாசனத்தை சீரழிவிற்குட்படுத்தும் கசினோ சூதாட்ட நிலையங்களை முற்றுகையிடுவதற்கு எங்களுடன் இணைய முடியுமா? முடியாதா, இச் சவாலுக்கு உடனடியாக பொதுபலசேனா பதிலளிக்க வேண்டும். இதற்கிணங்க பொதுபலசேனா அமைப்பிற்கு மாத்திரமின்றி அனைத்து பெளத்த அமைப்பிற்கும் அழைப்பு விடுக்கிறோம்.
இதேவேளை, பொதுநலவாய மாநாட் டின்போது இலங்கையில் பிரபல வர்த்தகர்கள் இருக்கத்தக்க சூதாட்ட மன் னன் ஜேம்ஸ் பெக்கரிற்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியமையானது இலங்கை யின் வர்த்தகர்களை புறந்தள்ளும் செயற்பா டாகும்.
எனவே, சூதாட்ட சட்ட மூலத்தை கிழித்தெறிவதுடன் கசினோ சூதாட்ட விடுதிகளை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.
.jpg)
Post a Comment