Header Ads



கெஞ்ரில்வால் வெற்றியின் பின்னணியில் முஸ்லிம்கள்

(நஜீப் பின் கபூர்)
நடந்து முடிந்த இந்திய மானிலங்கள் அவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. இந்தத் தேர்தலில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டில்லி சட்ட சபைக்கான தேர்தலில் எவரும் எதிர் பார்க்காதவகையில் கடந்த வருடம் அரசியலில் இறங்கிய சமூக ஆர்வலர் ஆனந் கெஞ்ரில்வாலின் கட்சி டில்லியில் பெரு வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை வரலாற்றில் முதல் முறையாக மூன்றாம் இடத்திற்குத் தள்ளி இருக்கின்றது. 

அது மட்டுமல்லாமல் மூத்த அரசியல் வாதியும் முன்னாள் டில்லி முதல்வருமான ஷPலா டிக்சிட்டை கெஞ்ரில்வால் நேரடி மோதலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கின்றார். இந்தத் தேர்தலில் கெஞ்ரில்வாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கெஞ்ரில்வால் முஸ்லிம்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருக்கின்றார்.

ஷPலா டிக்சிட் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக ஊடகங்களுக்கப் பேசும்போது இந்தக் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எதுவுமே கிடையாது நாம் இந்தக் கட்சியைக் கண்டு கொள்ள பேவதில்லை என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.