Header Ads



மாகாண சபைகளை விட, மத்திய அரசின் மூலமாகவே அதிக வளங்களை பெற்றுக் கொள்ளலாம் - ஆரிப் சம்சுதீன்


(சுலைமான் றாபி)

தற்போதைய கால கட்டத்தில் விளையாட்டுக் கழகங்கள் மாகாண சபைகளை விட மத்திய அரசின் மூலமாகவே அதிக விளையாட்டு வளங்களை பெற்றுக் கொள்ளலாம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்கள் தெரிவித்தார். இன்று (08.12.2013) இடம்பெற்ற நிந்தவூர் சதாம்  விளையாட்டுக்கழகத்தின் 2013ம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்காக விருது வழங்கல் மற்றும் வருடாந்தப் பொதுக்கூட்டத்தின் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

விளையாட்டு என்பது நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய  ஒரு ஊடகமாக  இருக்க வேண்டும். இதன் மூலம் நமது மன இறுக்கத்தினை தளர்த்தி சுகதேகியாக செயற்பட அது வழிசமைக்கும். வேண்டும். இந்த விளையாட்டின் மூலம் விரிவினைகளை நாம வளர்த்துக்கொள்ளாமல் இதில் அவதானமாக தொழில்பட  வேண்டும்.  எந்த விடயங்களை எடுத்துக்கொண்டாலும்  பிரிவினைகள் வந்து முன்னோக்கி நின்று எமது மக்களிடையே காணப்படுகின்ற குறைபாடுகளை பார்க்ககூடியதொன்றாக அது காணப்படுகிறது. இதை  விடுத்து இந்த விளையாட்டின் மூலம் அதிக திறமைகளையும், நிறைகளையும் காணக்கூடியதொன்றாக இதை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த விளையாட்டானது வீட்டிலுள்ள அழுத்தங்களை  நீக்குவதற்கு  பிரச்சனைகளை  மறைப்பதற்கு  துணை வருகின்ற ஒரு அம்சமாக  விளையாட்டு அமைய வேண்டும். மேலும் நமதூரில்  ஒழுங்கான மைதானம் இல்லை. கிரிக்கெட், உதைபந்து தவிர இன்னும் அநேக விளையாட்டுக்களை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால் அததற்கான பல பௌதீக காரணிகள் நமக்கு துணை  வராமல் உள்ளது. இதில் ஹொக்கி, கூடைபந்து, டென்னிஸ் , ரக்பி , பட்மிண்டன் இன்னும் இது  போன்ற விளையாட்டுக்கள் நமதூரில் இல்லை . அதற்கான மைதானமும் குறையாகவே  காணப்படுகிறது. 

எமதூரில் தூங்கி கிடக்கும் விளையாட்டு திறமைகளை இனங்கண்டு அவைகளை அபிவிருத்தி செய்வதற்காக  உள்ளக விளையாட்டு மைதானம் அவசியம்  தேவைப்படுகிறது . இதற்காக வேண்டி சுனாமி வந்த வேளை இவைகளை ஒரு அரச  சார்பற்ற நிறுவனங்களின் மூலமாக செய்ய வேண்டும் என்ற  திட்டங்கள் என்னிடம் இருந்தது, ஆனால் அவைகள்  தற்போது நிறைவேறாமல் போய்விட்டதுதான் கவலை அளிக்கிறது. உண்மையில் இங்கு இருக்கின்ற விளையாட்டு கழகங்கள் திட்ட வரைபு அற்ற கழகங்களாகவே இருக்கிறது ஏனென்றால் மேற்சொன்ன விளையாட்டுக்களை அபிவிருத்தி அடையச் செய்வதற்கும் ஏற்கனவே நமக்கு இருக்கின்ற வளங்களை அபிவிருத்தி செய்வதுடன், புதிய வளங்களை பெற்றுக் கொள்வதற்கான  ஒரு திட்ட வரைபாவது விளையாட்டுக் கழகங்களிடம் இல்லை என்பதுதான் தற்போதைய நிலைமையாக இருக்கிறது. 

எனவே இவைகளையெல்லாம் எதிர்காலத்தில் செவ்வனே நிறைவேற்ற ஒவ்வொரு விளையாட்டு கழகங்களிலும் இருந்து இரண்டு பேர் முன்வது ஒரு குழு மூலமாக செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வின் இறுதியில் நிந்தவூரின் விளையாட்டு அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் சேவையாற்றி பதவி உயர்வு பெற்றுச்சென்ற விளையாட்டுத் துறை அமைச்சின் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் AL அனஸ் அஹமட் அவர்களின் சேவையை பாராட்டி  நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகம்  சார்பாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் விஷேட ஞாபக சின்னத்தினை வழங்கி கௌரவித்தார். இதேவேளை நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகத்தின் 2013ம் ஆண்டிற்கான  கெளரவ  விருதினை AM ஹாரிஸ் அஹமட் பெற்றுகொண்டார். 

இந்நிகழ்விற்கு  அதிதிகளாக நிந்தவூர் விளையாட்டு உத்தியோகத்தர் AMM றசீன், இம்ரான் விளையாட்டுக்  கழகத்தின் உப தலைவர் AL ஹம்சா, சதாம் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர் AM சாதிக், சமூக சேவையாளர்  றியால் றனா மற்றும் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


No comments

Powered by Blogger.