Header Ads



முஹர்ரம் புத்தாண்டு மலர்ந்தது - (Muharram - 1435)


(முனையூர் ஏ. ஸமட்)

சந்திர ஓட்டத்தில்
சுழன்று மலரும் 
சன்மார்க்க மாதங்களின்
முதல்வனே... 
முஹர்ரமே...!
உன்வரவு நல்வரவாகட்டும்.

பிறந்த மண்ணை
துறந்து போன
வள்ளல் நபியின்
'ஹிஜ்ரத்'
வரலாற்றினாலே வந்த 
எங்கள் புத்தாண்டே
புனித மாதமே
உன்னை வரவேற்கிறோம்.

பாவங்களால்
இருளாய் போன
இதயங்களின் பரிகாரத்திற்காய்
ஆஷுரா தினத்தை
அருளிய மாதமே
உன்னைப் போற்றுகிறோம்.
அகிலம் போற்றும்
அண்ணல் நபியின் அருமைப் பேரனாம்
ஹஸன் ரலியின்
உதிரம் உதிர்ந்த 
கர்பலா நினைவுகளை
முஹர்ரமே...!
உன்னால் நெஞ்சங்கள்
நினைவுபடுத்தட்டும்..!

அல்லாஹ் அருளிய
வாழ்வின் நெறி
அற்புதக் குர்ஆணைச் சுமந்த
எங்களிடையே
பதவிப் பேராசைகளினால்....
அரசியல் அசிங்கங்களினால்...
ஊர்வாத வரட்சிகளினால்....
ஓற்றுமை பறிபோகாது
ஐக்கியம் பிறந்திட
உன் மலர்வு உதவிடட்;டும்.

மனிதம்
மரித்த மானிடர் வாழும்
மண்ணினிலே – சில
உன்னுறவு ஜீவன்களின்
நெஞ்சங்களினில்
உந்தன் உதயம்
மறக்கப்பட்டும் கூட 
மனிதாபிமானமும்
மறுமலர்ச்சியும்
உன் பிறப்பால் பிறந்திடட்டும்..

முஹர்ரமே...!
எங்கள் புதுவருடமே
உன்னை வரவேற்கிறோம்
பிரிவினையும் 
பாகுபாடும் 
நெருக்குவாரங்களுமல்லாது
 நிம்மதியாய்
இத்தேசத்தில் 
மலரும் பொழுதுகளில்;
நிம்மதியுடன் வாழ்ந்திட
உன் வரவு
வழியமைத்திட வேண்டுமென
இறைவனை வேண்டியவர்களாக....

No comments

Powered by Blogger.