கல்முனையில் சமுர்த்தி வங்கிகளின் சிறு குழுக்கள், மக்கள் கட்டமைப்புகளுக்கான விழிப்பூட்டல் வேலைத்திட்டம்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் தாபிப்பதற்கு முன்னராக சமுர்த்தி வங்கிகளின் சிறு குழுக்கள் மற்றும் மக்கள் கட்டமைப்புகளுக்கான விழிப்பூட்டல் வேலைத்திட்டம் இன்று 2013.11.14 நாடளாவிய ரீதியில் சமுர்த்தி அதிகார சபையினால் நடத்தப்பட்டது.
கல்முனை பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமுக சேவை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்திலும் ,மாலை நற்பிட்டிமுனை கிராமத்திலும் நடை பெற்றது.
சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இஸ்லாமாபாத் கிராம மக்கள் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடை பெற்ற இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் , அம்பாறை மாவட்ட் சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் உட்பட உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் அடங்கலாக சமுர்த்தி வங்கி சங்க குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு திவிநெகும திணைக்களம் தொடர்பாக அதில் உள்ள நன்மைகள் பற்றி விரிவாக எடுத்து கூறினர்.




Post a Comment