Header Ads



நிந்தவூரிலும் யானைகளின் அட்டகாசம்.

(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)

நிந்தவூர்  செங்கப்படை  வயல்பிரதேசத்தில்  உள்ள  தென்னந்தோட்டத்தினுள்  காட்டுயானைகள்  நேற்று 2013 11 02 நள்ளிரவு  உட்புகுந்து  13 இற்கும் அதிகமான  தென்னங்கன்றுகளை  அழித்து  துவம்சம் செய்துள்ளன.இதற்குமுன்னரும் பலதடவை  இந்தத்தோட்டத்தை காட்டு யானைகள்  நாசப்படுத்தியுள்ளன.

வயல் விதைப்பு நடவடிக்கைகள்  நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற  நாட்களில் இவ்வாறு காட்டுயானைகள் உட்புகுவதை இட்டு விவசாயிகள்  விசனம் தெரிவித்துள்ளனர்.

பலமுறை வன விலங்குகள்  திணைக்களத்திற்கு இதுபற்றி  தெரியப்படுத்தியும் குறித்த காட்டு யானைகளது  தாக்கத்தில் இருந்து இந்தப்பகுதியில் உள்ள தென்னன்தோட்டங்களை காப்பதற்கு அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இதுபோலவே  இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடுவில் பிரதேசத்தில் உள்ள  பல தென்னந் காணிகளுக்குள்   தினமும் காட்டு யானைகள் புகுந்து  தொடர்ச்சியாக சேதம் விளைவித்துக்கொண்டே இருக்கின்றன.இவ்வாறு குடுவில் பிரதேசத்தில் தொடர்ந்து யானைகளின் தாக்கம் இருப்பதால் மில்லியன் கணக்கில்  பணத்தை செலவிட்டு தோ ட்ட்டம் அமைத்த பலர்  அவற்றை இடை நடுவிலே கைவிட்டு விரக்தியுற்று இருக்கின்றனர்.இதுபற்றி  தென்னை அபிவிருத்தி சபை கரிசனை எடுக்க வேண்டும்.இவ்வாறு யானைகளால் தென்னை பயிர்செய்கை அழிக்கப்படுவது நாட்டின்  தேசிய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

மகிந்த சிந்ந்தனை மூலம் "கபூருக்க" திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தென்னந்தோட்டங்கள் உருவாக்கப்பட  அரசு நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் ,இவ்வாறு யானைகளால் தென்னைப்பயிர்செய்கை  படிப்படியாக அழிக்கப்பட்டுவருவதை இட்டு அமபாரை மாவட்ட தென்னை  பயிர்செய்கை அபிவிருத்தி  நிலையம் எதுவித ஆக்கபூர்வ  நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அநேகமான தென்னைச்செய்கையாளர்கள் கபூருக்க திட்டத்தின் கீழ் கடன் பெற்றே தமது செலவுகளை சமாளித்து வந்தனர்.தற்போது தோட்டங்கள் பயன்கொடுக்கத்துவங்கும்  நேரத்தில் அழித்து  நாசம் செய்யப்படுவதால்   கடனை மீளச்செலுத்த திண்டாடுகின்றனர்.

யானைகளால் சேதம் விளைவிக்கப்பட்ட தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இதுவரை எதுவித நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை .

மாதாந்தம் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில்  பலமுறை இந்த விடயம் பேசப்பட்டும்  எதுவித பலனும் இல்லை.இனியாவது இந்தப்பிரச்சினை பற்றி  அரசாங்க அதிபரும்  மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகான சபை உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து திணைக்கள தலைவர்களும்  சற்று மனமிரங்கி  ஏழை விவசாயிகளின்  பிரச்சினைகளிற்கு  தீர்வொன்று காண முன்வரவேண்டும்...ஏற்கனவே அழிந்து கைவிடப்பட்ட தோட்டங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான   நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.