Header Ads



கல்முனை மாநகர முதல்வர் பதவி பற்றி ஓர் அலசல்

(மருதூர் ப்ரிஆ) 

கல்முனை மாநகர சபையின் முதல்வர் பற்றிய பிரச்சினையே இன்றைய பேச்சாக மக்கள் மத்தியிலே உலா வருகின்றது. அன்று செய்தது சரியா, இன்று செய்தது சரியா, அவர் கூறியது சரியா, இவர் கூறியது சரியா, அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம் என்றெல்லாம் மக்கள் கூடிக் கூடி அலசுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

நாமும் அவ்விடயத்தைப் பற்றி சிறிது அலசிப் பார்ப்போம்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் காலத்தின் போது, முதன்மை வேட்பாளரை வெளிப்படையாக மக்களுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. கட்சிக்குள்ளே முதன்மை வேட்பாளர் சம்மந்தமான ஒரு வியூகம் வகுக்கப்பட்டிருந்ததாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கசிந்து கொண்டிருந்தாலும், அது பற்றி கட்சியினால் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தான், குறித்த அந்த தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரக் கூட்டத்திலே பசீர் சேகுதாவுத் பேசும் போது, ஒரு வாக்கையேனும் அதிகமாகப் பெறுகின்றவரே முதல்வராக நியமிக்கப்படுவார் என்று கூறியதானது சாய்ந்தமருது மக்களிடையே ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதனை மறுப்பதற்கில்லை.

தேர்தலும் நடந்தது. சிராஸ் மீராசாஹிபும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார். முதல்வர் யார் என்ற குழப்பமும் உருவானது. தேர்தலுக்கு முன் முதன்மை வேட்பாளரை மக்களுக்கு அடையாளம் காட்டியிருந்தால் அல்லது அவ்வாறில்லாமல், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர் யார் என்பது கட்சியினால் தீர்மானிக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்திருந்தால் இந்தக் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், முதல்வரைத் தீர்மானிக்கின்ற உரிமை முழுக்கவும் கட்சியைச் சார்ந்தது. விருப்பு வாக்கினை அதிகமாகப் பெற்றவர் தான் முதல்வராக வரவேண்டும் என்ற நியதியில்லை. அண்மையில் நடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்ற பிரதமரின் மகன் முதலமைச்சராக நியமிக்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே.

தேர்தலுக்குப் பின்னர் நடந்த குழப்பங்களுக்கு மத்தியிலே, சுமுகமானதொரு தீர்வை எட்டவேண்டும் என்ற நோக்கிலே, முதலிரண்டு வருடங்களுக்கும் சிராஸ் மீராசாஹிப் முதல்வராகவும், பின்னைய இரண்டு வருடங்களுக்கும் நிசாம் காரியப்பர் முதல்வராகவும் செயற்படுவது என்று கட்சியினால் முடிவு செய்யப்பட்டது. இதனை சிராஸ் மீராசாஹிப் ஏற்றுக் கொண்டு வாக்குறுதியும் வழங்கப்பட்டதாக அவரே ஒத்துக் கொள்கின்றார். இவ்விடத்திலே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், அவர் இம்முடிவுக்கு தன்னிச்சையாக உடன்பட்டாரே தவிர, தனக்கு வாக்களித்த மக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, வர்த்தகர் சங்கம் உட்பட யாரையும் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருடங்கள் இரண்டும் சீக்கிரமாகவே ஓடிவிட்டதோ என்னவோ. மீண்டும் குழப்ப நிலை தோன்றியது. ஏற்கெனவே வாக்குறுதியளித்ததன் படி, இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது, முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யும்படி கட்சித்தலைவர் கேட்ட போது, இல்லை, இந்த முதல்வர் பதவி எனக்குரியதல்ல, அது சாய்ந்தமருது மக்களுக்குரியது, எனவே அவர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே நான் எனது முடிவைக் கூறுகிறேன் என்றார். ஆரம்பத்திலே வாக்குறுதி வழங்குவதற்கு முன் தேவைப்படாத மக்கள் இப்போது தனது பதவியை தக்கவைப்பதற்காக தேவைப்பட்டனர். ஆரம்பத்திலேயே இதனை மக்கள் முன் கொண்டு வந்திருந்தால், அவர்களே இதற்கொரு தீர்வை எவ்வழியிலேனும் பெற்றுக் கொடுத்திருப்பார்கள். அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்.

எப்படியோ மக்களையும் இதற்குள்ளே இழுத்து, தனக்கு ஒரு அரணை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில், மக்கள் கருத்தறிந்து மக்களின் முடிவுப்படி நடந்து கொள்வேன் என்ற தொனியில் ஒரு மகாநாடு ஒழுங்குபடுத்தப்பட்டது. அதிலே மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்குப் பதிலாக, தங்களால் அழைக்கப்பட்ட தங்களின் சார்பான சிலரை மட்டும் பேச விட்டு, அவரும் தன்பக்க நியாயங்களை மட்டும் முன்வைத்து இறுதியாக, முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியானது வாசிக்கப்பட்டு, இதுவே மக்களின் முடிவு என அறிவிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். ஆனால், வெளியுலகிற்கு இது சாய்ந்தமருது மக்களின் தீர்மானம் எனக் காட்ட முற்படுவது மக்களை ஏமாற்றுகின்ற சுயநல போக்கையே காட்டுகிறது.

இஸ்லாத்தின் பார்வையிலே, வாக்குறுதியொன்றை வழங்கி அதனை நிறைவேற்றாமல் விட்டால,; அதன் பிரதிபலன்கள் எவ்வாறு அமையும் என்பது பள்ளிவாசலோடு தொடர்பு பட்டவர்களுக்கு தெரியாமலா இருக்கும். அந்த வகையில், வாக்குறுதி வழங்கியதை பகிரங்கமாகவே ஒத்துக்கொண்ட ஒருவருக்காக வக்காலத்து வாங்குவதை பள்ளிவாசல் நிருவாக சபையினர் எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றார்கள்? தீர்க்க வேண்டிய நேரத்தில் தீர்க்க முயற்சிக்காமல், இப்பொழுது இந்தப் பிரச்சினைக்குள் மக்களை மட்டும் உள்வாங்கியது மட்டுமல்லாமல், ஊரின் காவலர்களாக இருக்க வேண்டிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரையும் சம்மந்தப்படுத்தி தீhவு காண முயற்சிப்பது வேடிக்கையானது.

17000 இற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட சாய்ந்தமருதில் வெறுமனே சுமார் 2000 மக்கள் ( இதில் சாய்ந்தமருது மக்கள் மட்டுமல்ல, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டார்கள் என்று குறிப்பட்ட கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே கூறியுள்ளார்கள் ) கூடிய ஒரு கூட்டத்தில் மக்களின் கருத்துக்களை கோராமல், அவர்களின் கருத்துக்களைக் கூறுவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்காமல், தங்களால் அழைத்து வரப்பட்ட ஓரிருவரை மட்டும் பேச விட்டு, பின்னர் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு பிரதி பண்ணப்பட்டிருந்த சிலரின் சொந்த தீர்மானமான அறிக்கையை வாசித்துவிட்டு, அதனை சாய்ந்தமருது மக்களின் தீர்மானம் என்று கூறுவதை நடுநலையாக சிந்திக்கின்ற எந்த சாய்ந்தமருது மகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதனை சாய்ந்தமருது பிரகடனம் என யூரியுபில் கூட பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் சோரம் போயிருக்கிறது.

ஆகமொத்தத்தில் இந்த இழுபறியிலே எப்படிப் பார்த்தாலும், ஆப்பிழுத்த குரங்கு போல சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அகப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. அதிலும் இரு தரப்பினருக்கும் இதுவொரு தன்மானப் பிரச்சினையாகியும் விட்டது.

யாh விட்டுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

4 comments:

  1. மருதூர் ப்ரிஆ அவர்களே, நீதி நியாயம் சத்தியம் பதியப்பட்டுள்ளது. உங்களுக்கு எனது பணிவான நன்றிகள்.

    நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

    சாய்ந்தமருது நம்பிக்கையலர்ன் சபையே..!! உங்களுக்கு என்ன நடந்தது...????

    ReplyDelete
  2. KODUTHE VAKKAI KAPPATRUVETHU ORU MUSLIMIN PANPU ATHAI SIRAS THAVERE VITTAR. AVER SLMC IN UNMAIYANE PORALI ALLE.

    ReplyDelete
  3. KODUTHE VAKKAI MEERUVETHU ORU MUSLIMIN PANPALLE

    ReplyDelete

Powered by Blogger.