வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு அரச அதிகாரிகள் இடையூறு - மாகாண உறுப்பினர் ஜவாஹிர் ஜெனுபர்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
வடமாகாண சபையின் 2ஆம் அமர்வு நேற்று (11) கைதடி மாகாண சபை பேரவையில் இடம்பெற்றபோது பொதுஜன ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக முல்லைதீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் ஜெனுபரின் முதலாவது கன்னிப் பேச்சு இடம்பெற்றது.
இதன்போது அவரது உரையில் தனது வெற்றிக்காக உதவிய தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு வடமாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணமாக இருப்பதால் மேற்படி மாகாணத்தில் பாரபட்சமற்ற வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவேண்டும் என்றும் வடமாகாண முஸ்லிம்கள் அனைவரும் முழுமையாக குடியமர்த்தப்பட வேண்டும் அதற்காக தன்னாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் குறிப்பிட்ட அவர் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்குப்பின் தற்போது வடமாகாணத்தில் மீள்குடியேறும் மக்களுக்கு ஒரு சில அரச அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அதனை குறித்த அதிகாரிகள் நிறுத்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
மேலும் அவர் வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் ஆகிய இருவரும் வடமாகாணத்தில் இன, மத பேதமின்றி சகல மக்களுக்கும் பாரிய உதவிகளை வழங்கியதுடன் திறமையான முறையில் சேவையாற்றியமைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை இருவருக்கும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment