Header Ads



கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம்


 (எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ஏற்பாட்டில் ரூபா 4.5 மில்லியன் செலவில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் நிறுவப்படவுள்ளது.

மேற்படி பாடசாலையின் வகுப்பறைக் கட்டடத்தின் அவசியம் குறித்து அதிபர் உட்பட பாடசாலைச் சமூகம் sஉறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தது. 

இதை ஏற்றுக்கொண்ட மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சரிம் sவகுப்பறைக் கட்டடத்தின் அவசியம் குறித்த வேண்டுகோளை முன்வைத்ததையடுத்து 4.5 மில்லியன் ரூபா செலவில் இவ்வத்தியாலத்தில் இரண்டுமாடிக் கட்டத்தை அமைப்பதற்கான நிதியை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

இப்பாடசாலையின் நிலைமையினை ஆராயும் பொருட்டு இன்று 8.11.2013 குறித்த பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மாகாணசபை உறுப்பினர் வகுப்பறைக் கட்டடம் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டதுடன் அது குறித்து அதிபர் உட்பட பாடசாலைச் சமூகத்துடன் கலந்துரையாடினார்
அத்;துடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கற்றல் கற்பித்தல் தொடர்பில் கேட்றிந்தகொண்துடன் வித்தியாலயத்தின் குறைநிறைகளையும் கேட்டு அறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.