Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது

(ஏ.எல்.ஜுனைதீன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு 4 ஆம் திகதி திங்கள்கிழமை மீண்டும் கூடி கட்சியின் தலைமைத்துவம் குறித்து முடிவுகளை எடுக்கவிருக்கின்றது.

அனைவரின் இணக்கப்பாட்டையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஐக்கிய பிக்குகள்தேரர்களின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு யோசனைகள் அடங்கிய இந்த ஆவணத்தில் கருஜயசூரியா மற்றும் சஜீத் பிரேமதாச ஆகியோரும் ஒப்பமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “தலைவர்” என்ற பதவிக்குப் பதிலாக புதிய யோசனைகளின் பிரகாரம் “தலைமைத்துவ சபை” என்ற புதிய முறைமை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “ஆலோசனை சபை”  “தலைமைத்துவ சபை” எனவும் மற்றப்பட வேண்டும் எனவும் புதிய யோசனைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தலைமைத்துவ சபைக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் மூவரைப் பெயரிட முடியும். அதே போன்று சஜீத் பிரேமதாசவுக்கு அவர் உள்ளிட்ட மூவரையும் இது போன்று கருஜயசூரியவுக்கு அவர் உட்பட மூவரையும் பெயரிட முடியும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
அனைத்து அதிகாரங்களும் தலைமைத்துவ சபைக்கு வழங்கப்படல் வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.