Header Ads



கல்முனை மேயர் விவகாரம் - ரவூப் ஹக்கீமை சந்திக்கிறார்கள் பள்ளிவாசல் பிரதிநிதிகள்

கல்முனை மாநகர முதல்வர்  விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்  எடுத்திருக்கின்ற முடிவு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை  சாய்ந்தமருது  நம்பிக்கையாளர்  சபையினர்   தலைவர் ரவூப் ஹக்கீமை  சந்திப்பதற்கு நேரம்  ஒதிக்கியுள்ளதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

முதல்வர் தொடர்பான பிரகடன அறிக்கை மற்றும் அங்கு தெரிவிக்கப் பட்ட கருத்துக்கள் என்பன  நம்பிக்கையாளர் சபயிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. இன்று  ரவுப் ஹக்கீமை அவர்கள் சந்திக்கவிருந்தும்  ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது .இதனிடையே தலைவரின் அதிரடி அறிவிப்பானது சாய்ந்தமருதில் ஒருவகை அமைதியற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது 

தேர்தலில் அதிக விருப்பு வாக்குப் பெற்றும்  முதல்வர் பதவி சாய்ந்தமருதுக்கு மக்களால்  போராடி பெறப்பட்டது. அதனை மீள வழங்க  மக்களே  தீர்மானிப்பர்  என்ற அடிப்படையில்  நம்பிக்கையாளர் சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை  சந்தித்து  பேசியதன் பின்னர் இதற்கான மாற்று நடவடிக்கையினை  சாய்ந்தமருது மக்கள் எடுப்பார்கள் என  முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார் 

2 comments:

  1. இப்படிப்பட்ட சில்லரைப் பிரச்சனைகளை தீர்க்கமுடியாத ஒரு தலைமைதான் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ப்பதாக பறை அடித்துக் கொண்டு திரிகின்றார். இரு ஊர் மக்களை உசிப்பேத்தி அரசியல் பொலப்பு நடத்துவது பெண்களை வைத்து வியாபாரம் செய்வததைவிட கேவலமானது.

    ReplyDelete
  2. எல்லாவற்றிலும் தலைமைபீடத்தை குறை சொல்லமுடியாது .எல்லோரிடமும் விட்டுக்கொடுக்கும் தன்மை வந்தால்தான் எதையும் நடத்தமுடியும் தலைவர் என்றால் ஆசிரியரும் அங்கத்தவர்கள் மாணவர்களும் இல்லை,பிரம்பால் அடித்து தருத்துவதர்க்கு ,அல்லாஹ்வுடையபயம் இல்லாதவர்களிடம் பேசிவேலையில்லை,இவருடைய பிடிவாதத்திற்கு பின்னால் பெரியதொரு அரசியல் பலம் உள்ளது,இந்தப்பரச்சினையால் இவரைமுஸ்லிம் காங்ரஸ் கட்சியைவட்டு வெளியேற்றினால்,நிச்சயமாக இவர் பெரும்பான்மை கட்சியுடன் இவரின் அரசியல் பயணத்தை தொடருவார்,கட்சி மாறினாலும் வாக்குவங்கியை தக்க வைத்துக்கொள்ளவே பள்ளிவாயல் நிருவாத்தினதும்,பொதுமக்களினதும் ஆலோசனைப்படிநடப்பேன்சொல்வதுச

    ReplyDelete

Powered by Blogger.