Header Ads



காட்டு யனைகளை கட்டுப்படுத்த யாருமில்லையா..?

(M.A.G.M.Muhassin)

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம வீட்டுத் திட்டத்தை அண்டிய கரைவாகுவட்டை பிரதேசத்தில் காட்டுயானைகளின் ஊடுருவல் நாளாந்தம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பலவகையான அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இங்கு வசிக்கும் மக்கள் பெரும் பீதியுடன் இரவு முழுவதும் விழித்திருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர், இங்கு வரும் காட்டு யானைகள் எந்தே நேரத்திலும் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து சேதங்களை விளைவிக்கலாம் என மக்கள் அச்சப்படுவதுடன் அனைவரும் விழித்திருந்து தீப்பந்தங்களை ஏந்தி பட்டாசு கொளுத்தி யானைகளை விரட்டி வருகின்றனர்.

இவ் கரைவாகுவட்டை மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தாக்குதல் நாடுகளுக்கு மத்தியில் இடம் பெறும் யுத்தங்களை போன்று அடிக்கடி பட்டாசு சத்தம்  திடீர் என சத்தங்கள் கேட்பதால்,                                    சிறு குழுந்தைகளின் உள்ளங்களில் உளவியல் பாதிப்பு ஏற்படும், என நாங்கள் அஞ்சுகின்றோம் என தெரிவித்தார்கள்,                                                                       இங்கு வரும் யானைகளின் அட்டகாசத்தினைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களுடன் வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு படையினரும் இணைந்து உதவி வருகின்றனர். என்றாலும் இறுதி கட்டத்தில்தான் வறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.                                                  

மேலும்  அதிகமான பத்திரிகைகளுக்கும், இணைய தளங்களுக்கும் கூறியுள்ளோம்.  எந்த பயனும் இதுவரை கிட்டவில்லை என தெரிவித்தார்கள்.   மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் காட்டு யானைகளின் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் இவ்வூர் பிரதேச அரிசியல் வாதிஙளும் ஒன்றிணைந்து மிக மிக விரைவாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு அதி துரிதமான நடவடிக்கை மோற்கொள்ள வேண்டும் என   சாய்ந்தமருது,               கரைவாகு வட்டை மக்கள் மீண்டும்  கோரிக்கை விடுக்கின்றனர்.

1 comment:

Powered by Blogger.