கருவுக்கு வாழ்த்துக்கூறிய சந்திரிக்கா, சஜித் ஆதரவாளர்களையும் சந்தித்தார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவராக தெரிவாகியுள்ள கரு ஜயசூரியவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் நிலைபெற வேண்டுமானால் பலமான எதிர்க்கட்சி ஒன்று இருப்பது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள சந்திரிக்கா, ஐக்கிய தேசியக் கட்சியினரை மீண்டும் ஒற்றுமைப்படுத்தும் ஆற்றல் கரு ஜயசூரியவுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் கரு ஜயசூரியவும் அடுத்த வாரம் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் சிலரை கடந்த வாரம் சந்தித்து பேசியுள்ளார்.

நீங்கதான அம்மா இரண்டாஇரத்து இரண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்த கலைச்சது இன்னும் மீளமுடியாமல் இருப்பது நினையு இருக்கிறதா? இப்ப வாழ்த்து சொல்லுகிறீர்களோ? போனதல்லாம் போகட்டும் இப்ப ellorum onru serunkal
ReplyDelete