Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உண்மையை விளக்குமா..? (துண்டுப்பிரசுரம் இணைப்பு)

(கதிரவன்)

கல்முனை மாநகர முதல்வர் சர்ச்சைக்கு தீர்வு கண்ட கையோடு  கிழக்கு மாகான அமைச்சுப் பதவி தொடர்பாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் கல்முனை நகர சபை மீதான அதிரடி தீர்வு மாகான அமைச்சு விடயத்திலும் நடந்தேறுமா  ? என  வேண்டுகோள் விடுத்து மீண்டுமொரு சர்ச்சைகிளம்பியுள்ளது.

கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி இரண்டு வருட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இரண்டு வருட பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைய இருப்பதால் அவ்  அமைச்சர் பதவியை,  முதல்வரை இழந்து நிற்கும் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்க வேண்டும் என  சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற் குழு என உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இத்துண்டுப் பிரசுரத்தின் உண்மைத்தன்மையை விளக்குமா  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ?


No comments

Powered by Blogger.