Header Ads



புதிய விரைவுத் தபால் சேவை அறிமுகமானது..!

(எம்.எம்.ஏ ஸமட்)

பொதுமக்களுக்கான தபால் சேவையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு புதிய விரைவுத் தபால் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய சேவையினூடாக கடிதங்கள் மற்றும் பொதிகளை 24 மணித்தியாலத்திற்குள் அனுப்பவரிடமிருந்து பெறுநர் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

கொழும்பு நகரப் பகுதிக்குள் 4 மணித்தியாலங்களுக்கிடையிலும் மொறட்டுவ, மஹரகம, பொரலஸ்கமுவ, கடுவல, பியகம, கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய பிரதேசங்களில் 6 மணித்தியாலங்களுக்குள்ளும் கடிதங்கள், பொதிகளை பெறுநர் பெறக் சுடியதாக இருக்குமென மத்திய தபால பரிவர்தன நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும், இச்சேவையின் வலைப்பின்னலுக்குற்பட்ட நாட்டின் பிரதான நகரங்களில் கடிதங்கள் மற்றும் பொதிகள் அனுப்பப்படும் நாளுக்கு மறுநாள் முற்பகல் 11 மணிக்கு முன்பாக பெறக்கூடியதாகவும் வலைப்பின்னலுக்குற்படாத பிரதேசங்களில் இரண்டு நாட்களிலும் கிராமம் புறங்களில் 3 நாட்களுக்குள்ளும் இச்சேவையினூடாக அனுப்புவரிடமிருந்து இவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்ககுமென அவர் குறிப்பிட்டார்.
இப்புதிய சேவையானது விரைவானதகவும் பாதுகாப்பானதாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும். 

இப்புதிய சேவையினூடாக இச்சேவையின் வலைப்பின்னலுக்குட்பட்ட பகுதிகளுக்கு அனுப்படும் கடிதங்கள் மற்றும் பொதிகள் 50 கிராம் நிறைகொண்டதாக இருப்பின் 50 ரூபா கட்டணம் பெறப்படும். வலைப்பின்னலுக்கு உட்படாத பகுதிகளுக்காக 65 ரூபா கட்டணம் பெறப்படும். 

அத்துடன், ஒவ்வொரு மேலதிக 20 கிராம் நிறைக்குமாக 10 ரூபா பெறப்படும், 150 கிராம் நிறைக்கு மேலதிகமாக இருப்பின் சேவை வலைப்பின்னலுக்குட்பட்ட பிரதேசங்களுக்காக 95 ரூபாவும,; வலைப்பின்னலுக்கு உட்படாத பிரதேசங்களுக்குகாக 110 ரூபாவும் கடிதங்கள் மற்றும் பொதிகளை அனுப்பவதற்காக பெறப்படுமென அவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.