Header Ads



யாருமே எடுத்திராத ஒரு பாரிய முயற்சி

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

மனித வரலாற்றில் விதவைகள் என்பது ஒரு சமுதாயத்தில் முக்கியமான பிரச்சனையாகவும்  நாளாந்தம் பல்கிப்பெருகி வரும் ஒரு விடயமாக மாறிவிட்டது.

இது எல்லாச் சமுகத்திலும் காணப்படும் ஒரு கவலைக்கிடமான சம்பவங்களாகும் கணவன் மணைவியாக வாழ்க்கையில் இணைந்து கொண்ட பிறகு ஏதோ ஒரு விதத்தில் அதாவது கணவன் அல்லது மணைவி இயற்கையாக மரனமடைவது அல்லது விபத்துக்கள் மூலம் அல்லது நோய்கள் மூலம் ஏற்படும் இழப்புக்களோடு தம்பதிகள் இருவருக்கும் இடையில் ஏற்படும் கருத்து முறண்பாடுகள் அல்லது சண்டை சச்ரவுகள் மூலம் ஒருவரை ஒருவர் பிரிவது அல்லது பொருளாதார பிரச்சினைகள் போன்ற விடயங்களால் இந்த விதவைகள் என்ற நிலை மனிதனுக்கு ஏற்படுகின்றது.

இதன் பயனாக குறித்த அந்த குடும்பத்தில் ஏற்படும் தாக்கங்கள்  மற்றும் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சொல்லில் அடங்காது. இதில் அதிகமாக பெண்களே பாதிக்கப்படுவதும் கூட கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் அடைந்து கொள்ளும் பிரச்சினைகளை சமுதாயத்தில் யாருமே கண்டு கொள்வதில்லை என்பதுடன் அவர்களின் நன்மை பயக்கும்  விடயங்களில் கூட  எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத நிலைமைகளே தற்காலத்தில் காணப்படும் ஒரு கவலையான விடயங்களாகும்.

இந்த வகையில் இதுவரை காலமும் இலங்கையில் யாராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாத ஆனால் அவற்றின் தாக்கங்களை அனுபவரீதியாக கண்டறிந்து இஸ்லாமிய வாழ்க்கையில் அவற்றிக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு காணும் நல்ல நோக்குடன் இலங்கையில் காணப்படும் முஸ்லிம் விதவைகளை இனங்கண்டு அவர்களுக்கு வாழ்வில் எஞ்சிய காலங்கைளையாவது ஒளியூட்டுவதற்கு ஒரு பாரிய முயற்சியை அல்லாஹ்விற்காக வேண்டி தேச மாண்ய  கலாநிதி எம்.எஸ்.எச். முஹம்மது ஹாஜியார் அவர்கள் கதீஜா நம்பிக்கை நிதியம் மூலம் முயற்சிகளை மேற் கொண்டுள்ளார்.

கதீஜா நம்பிக்கை நிதியத்தின் மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் காணப்படும் விதவைகளை இனங்கண்டு அல்லாஹ்வின் உதவியால் அவர்கள் விரும்பும் வகையில் துணைவர்களை சேர்த்து வைப்பதற்கு தனது என்னத்தை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு கலந்துரையாடலினை கடந்த ஞாயிற்றுக் கிழமை (03) தொஹிவலையில் வாசல விதியில் உள்ள என்.எம்.டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலந்துரையாடலில் நாட்டில் உள்ள முஸ்லிம் புத்தி ஜீவிகளும், கல்விமான்கள், தனவந்தர்கள், நலன் விரும்பிகள், அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சிறந்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், மத்ரஸாக்களின் அதிபர்கள், ஒஸ்தாத் மார்கள், சட்டவல்லுனர்கள், நாட்டில் உள்ள பல காதியார் மார்கள், விவாகப் பதிவாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டவர்களை அடக்கிய சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மேற்படிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தத்தமது ஆக்க பூர்மாக கருத்துக்களை வழங்கியதுடன் எமது சமுகத்திற்கு தற்காலத்தில் தேவையானதொரு காத்திரமான முயற்சி என்றதுடன் மேற்படித் திட்டத்திற்கான தமது பூரண ஆதரவுகளையும் வழங்கவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போதைய நிலையில் சுமார் நாற்பதாயிரத்தும் மேற்பட்ட முஸ்லிம் விதவைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளதாகவும் இதத்தகவல்களை கிராம ரீதியாக பள்ளிவாசல்கள் மற்றும் விவாகப் பதிவாளர்கள் மூலம் தேவையாக தகவல்களைப் பெற்று அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து செயற்படவிருப்பதாகவும் கதீஜா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் முஹம்மத் ஹாஜியார் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் தனக்கு ஆர்வத்தை ஊட்டுவதற்கு நைஜீரியாவில் 1000 விதவைகளுக்கு மறுமணஞ் செய்து வைக்கப்பட்ட நிகழ்வு கண்ணுற்றமையைச் சுட்டிக்காட்டியதுடன் இதேபோல் தாமும் செய்யவேண்டும் என்ற நோக்குடன் தமது இந்த திட்டத்தின் மூலம் எல்லாத் துறையினரின் ஆலோசனைகளுடனும் முதற்கட்டமாக சுமார் நூறு விதவைகளுக்கு திருமண சேவையை நடாத் உத்தேசித்துள்ளதாகவும் இதற்கு தனவந்தர்கள் முன்வந்து உதவுமாறும் இதன் மூலம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் விதவைகளுக்க மறுவாழ்வு வழங்கி அவர்களின் பிள்ளைகளை மார்க்க பற்றுள்ளவர்களாக கல்வியில் முன்னேற வழி செய்ய அனைவரும் தராதரம் இன்றி இத்திட்டத்தில் இணைந்து ஒத்துழைப்பத் தருமாறும் முஹம்மத் ஹாஜியார் தெரிவித்தார்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விதவைகள் விடயத்தில் அதீத கவனஞ் செலுத்தப்படுவதன் மூலம் சமுதாயத்திலும், சமுயத்திலும் ஏற்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் சமுகத்தில் விதவைகளின் தொகையைக் குறைக்க இவ்வாறான சிறந்த தூர நோக்குடனான திட்டங்கள் முக்கியமானதாகும் எனவே இத்திட்டத்தில் இணைந்து அனைவரும் செயற்படும்போது இஸ்லாமிய சமுகத்தில் பாரியதொரு மற்றத்தையும் முன்னேற்றத்தையும் கண்டு கொள்ளலாம்.

மறுமணம் முடிக்க விருப்பமாணவர்கள் கதீஜா நம்பிக்கை நிதியத்தின் நிருவாகச் செயலாளர் எம். இஸ்மாயிலை 0112508438 எனும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தமது கருத்துக்களைத் தெரவித்துக் கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.