Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் உடன்படிக்கை பகிரங்கப்படுத்தப்படுகின்றது..!

(இ. அம்மார்)

கடந்த சில வாரங்கலாக கல்முனை மேயர் விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது. ஒருவாறு, சிராஸ் மீராசாஹிப் தனது பதவியை இராஜினாமாச் செய்ததுடன் அவ்விடயம் தனிந்துவிட்டது. இதேவேளை, குறித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம், அக்குறணையிலுள்ள உலமாக்கள் முன்னிலையில் பீ.எம்.ஜே.டி. யுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை கணக்கில் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்ற விடயமும் அடிக்கடி ஊடகங்களில் காணக்கிடைக்கின்ற ஒரு விடயமாகும். எனவே, அதுகுறித்த சில வெளிப்படுப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

ஒரு உண்மையைச் சொல்வதானால், முன்னால் வெளிவிகார அமைச்சர் மர்ஹும் ஏ.சீ.எஸ். ஹமீத், முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் டாக்டர் எச்.எம். மஹ்ரூப் போன்ற பல முக்கிய அரசியல் தலைவர்களை கண்ட ஊர் அக்குறணை. இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் இவர்கள் இருவரும் மிக முக்கியமானவர்கள். ஆனால், அவ்வாறான ஒரு ஊரான அக்குறணை, இன்று அரசியல் ரீதியாக மிகப் பிண்ணடைந்துள்ளது. பல தேவைப்பாடுகள் இருந்தும், இன்றைய அரசியல் தலைமைகளினால், அக்குறணையின் பிரச்சினைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக, அன்மையில் நடைபெற்ற மாகாண சபை கூட அக்குறணைக்கு பெரும் இழப்பைத்தான் கொடுத்தது. அதாவது, அக்குறணைக்கு இருந்த இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் கடந்த தேர்தலில் தோல்வியையே தழுவினர்.  எனவே, கடந்த தசாப்தங்களாக அக்குறணையில் ஒரு அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் இருக்கின்றமை நன்கு உணரப்படுகின்றது. கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர், அது மேலும் அதிகரித்துள்ளது. 

பீ.எம்.ஜே.டி?
இன்று தலைமைத்துவத்திற்கு வருவதற்கு பிரதான தகுதியாக பணமும், அதிகாரமுமே முன்னிலை பெறுகின்றது. குறிப்பாக, தலைமைத்துவம் என்பது, தானாகவே முன்வந்து பொறுப்பேற்கின்ற ஒழுங்கே இலங்கையிலும், இலங்கை முஸ்லிம் சமுதாயத்திலும் உள்ளது. இதன்காரணமாக பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களை மையப்படுத்தியே தலைமைத்துவங்கள் உறுவாகின்றன.  இந்நிலை ஆரோக்கியமானதல்ல. எனவே, இந்நிலையை மாற்றியமைத்து, ஒரு தலைமைத்துவ சபையை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒழுங்கே நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு என அதனை அறிமுகப்படுத்தினார், அதன் அங்கத்தவர் ஒருவர்.

மத்திய மாகாண மக்களது அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடிய, நல்ல தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குதல், வாக்குகளுக்குறிய பெறுமதியைப் வென்றெடுத்தல், சகல இனமக்களுடனும் நல்ல உறவை வளர்த்தல், வீண் விரயம், ஏமாற்றுகள் நிறைந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்தல் என்பதற்கு அதன் இலக்குகளாகும் என்றார் அவர்.

முஸ்லிம் காங்கிரஸ் - பீ.எம்.ஜே.டி. இணைவு
அக்குறைணப் பிரதேச சபைத் தேர்தல் 2011ம் ஆண்டு நடைபெற்றது. குறித்த காலப்பகுதியில்தான், பீ.எம்.ஜே.டி. யும் தோற்றம் பெற்றது. சுயேட்சைக் குழுவாக களமிறங்கத் திட்டமிட்டிருந்த பீ.எம்.ஜே.டி. யை, ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அனுகியுள்ளது. உலமாக்கள் மூலமாக, அவர்கள் முன்னிலையிலேயே பேச்சுவார்த்தையும் இடம்பெற்றுள்ளது. மிகக் காரசாரமான முறையில் நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தைகளின் பின்னர், எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் அக்குறணைக்கு சுமார் 80 கோடி ரூபாய் பெருமதியான வேளைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும், முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் பீ.எம்.ஜே.டி. யைச் சேர்ந்த 04 பேர்களை இணைத்துக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது. குறித்த 80 கோடி வேளைத்திட்டத்திற்காக, திட்ட வரைவுகளை வழங்குவதற்கு பீ.எம்.ஜே.டி இணங்கியது.

ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருதரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டது. பல எதிர்பார்ப்புக்களுடன், இரு குழுவும் சேர்ந்து களமிறங்கினாலும், இறுதியில் 03 ஆசனங்களை மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது. அதில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட கங்கா முஹ்சின் ஹாஜியாரும், பீ.எம்.ஜே.டி. சார்பாகப் போட்டியிட்ட ஐ.எம். இஸ்திஹார், எம்.ரீ.எம். சிராஜ் (பொறியியலாளர்) ஆகியோர் வெற்றி பெற்றனர். நான்காவது இடத்தில் பீ.எம்.ஜே.டி யைச் சேர்ந்த இர்பான் காதர் தெரிவாகி இருந்தார்.

அக்குறணைப் பிரதேச சபைத் தேர்தல் நிறைவடைந்து, இரண்டு வருடங்கள் தாண்டியுள்ள நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையாக எதுவும் நடக்கவில்லை என்ற விடயம் பகிரங்கமானதொன்று. ஏற்கெனவே உலமாக்கள் முண்ணிலையில், பேசப்பட்டதற்கு இணங்க மூன்று பிரதான திட்டங்களை வழங்கிள்ளதாக பீ.எம்.ஜே.டி. குறிப்பிடுகின்றது. அதில், அக்குறணையின் மத்தியில் அமைந்துள்ள மார்கட் கட்டிடத்தை இல்லாமலாக்கி, வாகனத் தரிப்புடன், நவீன வசதிகளுடன், 09 மாடிகளைக் கொண்ட கட்டத்திற்கான வரைபடம், அக்குறணையிலுள்ள 16 பாடசாலைகளுக்கும் தனித்தனியாக வாசகசாலைடன் கூடிய கலாச்சார மண்டபத்திற்கான திட்டம் ஆகியன பிரதானமானவை. குறித்த திட்டங்கள் 2012 ஆரம்பப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அக்குறணை பாலிகா வித்தியாலயம் எதிர்கொள்கின்ற இடப்பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு ஒரு கட்டிடத்தை வழங்குவதற்கான திட்டமொன்றும் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்கி ஒருவருடமாகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் - பீ.எம்.ஜே.டி. முறுகள்

இவ்வாறானதொரு தருவாயில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்குணைப் பிரதேச சபையில் அங்கம் வகித்த கங்கா முஹ்சின் ஹாஜியார் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விருப்புவாக்குகள் அடிப்படையில், அடுத்தாகவுள்ள இர்பான் காதர் தெரிவு செய்யபடுவாரா? என்ற ஒரு கேள்வி இருந்தது.  பொதுவாக ஒரு அங்கத்துவம் இழக்கப்பட்டால், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்ததாகவுள்ளவர் தெரிவாகின்றமையே ஒழுங்கு முறையும், ஜனநாயகமுமாகும். ஆனால், அக்குறணைப் பிரதேச சபை விவகாரத்தில், முஸ்லிம் காங்கிரஸ் குறித்த நியமணத்தை காலம் தாழ்த்திக் கொண்டே சென்றது. இது குறித்து, முஸ்லிம் காங்கிரஸ் - பீ.எம்.ஜே.டி. இடையில் பல கட்டக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தமக்கு குறித்த பிரதிநிதித்துவத்தை விட்டுத்தருமாறு பீ.எம்.ஜே.டி. யைக் கேட்டுள்ளார். செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையாக எதுவும் நடக்கவில்லை என்பதால், ஜனநாயக முறையில் தமக்குக் கிடைத்த பிரதிநிதித்துவத்தை விட்டுக் கொடுக்க பீ.எம்.ஜே.டி. மறுத்துள்ளது. பலமுறை கொடுத்த வேண்டுகோளின் பின்னர், தாம் குறித்த பிரதிநிதித்துவத்தை விட்டுத் தருவதாகவும், அதற்குக் கைமாறாக அக்குறணை பாலிகா வித்தியாலயம் எதிர்கொள்கின்ற இடப்பற்றாக் குறையை தீர்ப்பதற்கு, தாம் ஏற்கெனவே வழங்கியுள்ள திட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். ஆனால், குறித்த வேண்டுகோளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் இணங்கவில்லை. அவைகுறித்துப் பின்னர் பார்க்லாம் என்று கூறியுள்ளதுடன், பதவியை தனது கட்சிக்கு எடுத்துக் கொள்வதில் குறியாய் இருந்தார் என்றும் அறியக் கிடைத்தது. 

மத்திய மாகாண சபைத் தேர்தல்
இவ்வாறானதொரு தருவாயில் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. கண்டி மாவட்டத்தைப் பொறுத்த வரையில், அக்குறணை முஸ்லிம் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில், அக்குறணையில் மக்கள் செல்வாக்கைப் பெற்று வருகின்ற பீ.எம்.ஜே.டி. என்ன தீர்மானத்திற்கு வருகின்றார்கள் என்பது பலராலும் எதிர்பார்க்ப்பட்டது. ஏற்கெனவே, கையொப்பம் இடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் முறையாக எதுவும் நடைபெறாமை, ஜனநாயக முறையில் பீ.எம்.ஜே.டி. பெற்ற பிரதிநிதித்துவத்தை இர்பான் காதருக்கு வழங்குதில் முஸ்லிம் காங்கிரஸ் பின்வாங்கிமை போன்றனவற்றால், பீ.எம்.ஜே.டி. முஸ்லிம் காங்கிஸுக்கு ஆதரவு வழங்காது என்பது மக்களது ஊகமாக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே பீ.எம்.ஜே.டி. யுடன் கூட்டுச் சேர்ந்து அக்குறணைப் பிரதேச சபையில் தனது செல்வாக்கை இழந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாண சபையில் இணைந்து போட்டியிடுவதற்கு முணைப்புக் காட்டவில்லை. மாறாக, குறித்த பிரதிநித்துவத்தை வைத்து பீ.எம்.ஜே.டி. யின் ஆதவரைப் பெற்றுக்கொள்ள முணைந்தது. இறுதியாக, மத்திய மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக வாக்குறுதியளித்தால், குறித்த பிரதிநிதித்துவத்தை ஓரிரு தினங்களில் பீ.எம்.ஜே.டி. யிற்கு வழங்குவதாக நீதியமைச்சர் ரவூப் ஹகீம் கூறியதாகவும் தெரியவந்தது.

குறுகிய சிந்தனைகளுக்கும், பதவிகளுக்கும் முக்கியத்துவம் வழங்காமல் பீ.எம்.ஜே.டி. சுதந்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டது. பொருளாதார ரீதியாக நாடு எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கும், சில தீய சக்திகள் இணங்களின் ஒற்றுமையை சீர்குழைப்பதற்கு மேற்கொண்டு வருகின்ற இண ரீதியாக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமைக்கும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக, குறித்த மாகாண சபைத் தேர்தலில், பீ.எம்.ஜே.டி. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாகத் தெரிவித்தது. குறித்த தீர்மானம், முஸ்லிம் காங்கிரசிடம் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு எவ்வித பாதிப்பையும் செலுத்தப் போவதில்லை எனவும், குறித்த ஒப்பந்தம் அக்குறணைப் பிரதேச சபையை மையப்படுத்தி மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் பீ.எம்.ஜே.டி. தெரிவித்தது.

குறித்த தீர்மானம், முஸ்லிம் காங்கிரசின் அக்குறணை வாக்கு வங்கியில் பாரிய பிண்ணடைவை ஏற்படுத்தியதை மாகாண சபையின் முடிவுகள் தெளிவாகக் காண முடிகின்றது. மாகாண சபைத் தேர்தலின் பின்னர், அக்குறணைப் பிரதேச சபையின் குறித்த வெற்றிடம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இது குறித்து, பீ.எம்.ஜே.டி., முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கு எழுதிய கடிதம் பல ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தகக்து. குறித்த கடிதத்தின் பிரதிகள், அக்குணை உலமா சபை, அஸ்னா மத்திய பள்ளி ஆகியவற்றன் தலைவர்களுக்கும் கைளிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, ஜனநாயக முறையில் தெரிவான இர்பான் காதருக்குப் பதிலாக (1719 வாக்குகள்), அவரைவிடக் குறைந்தளவு வாக்குகளைப் பெற்ற மிஹ்லர் (1130 வாக்குகள்), என்பரை குறித்த வெற்றிடத்திற்கு தெரிவு செய்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது. அதற்கு, பீ.எம்.ஜே.டி. தமது எதிர்பைத் தெரிவித்துள்ளது. நீதியமைச்சராக இருந்து கொண்டு செய்துள்ள இந்த அநீதிகள், முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான பதிவை ஏனைய சமூகங்களுக்கு ஏற்படுத்தும் என பீ.எம்.ஜே.டி. வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலும் குறிப்பிடப்பட்டிருந்து.

செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள அக்குறணைப் பிரதேச சபை நிகழ்வில் தமது எதிர்ப்பைக் காட்டவுள்ள பீ.எம்.ஜே.டி. யிற்கு, சில சிங்கள உறுப்பினர்களும் தங்களது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இதேவேளை, உலமாக்கள் முன்னிலையில் பேசப்பட்டு, பீ.எம்.ஜே.டி. - ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட உடன்படிக்கையை, பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருதாக பீ.எம்.ஜே.டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

எவ்வாறாக இருந்தாலும், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் வெற்றிட விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மேற்கொண்ட அநீதியான தீர்மானமானது, பீ.எம்.ஜே.டி. யை தேசிய ரீதியில் பேச வைப்பதற்கும், ஏனைய இண மக்கள் மத்தியில் பீ.எம்.ஜே.டி. அறிமுகமாவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை.

தாம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் மிறுவது, செயல்படுத்தாது இருப்பது ஒரு முஸ்லிம் கட்சியின் பண்பாக இருக்க முடியாது. இருந்தாலும், அக்குறணை மக்களது நலன்கருதி பி.எம்.ஜே.டி. அடையாளம் கண்டு கொடுத்துள்ள, திட்டங்களையாவது முன்னெடுக்க முஸ்லிம் காங்கிரஸ் முன்வரவேண்டும். குறிப்பாக, அக்கறணையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், பதவிகளை மாத்திரம் இலக்கு வைத்து செயல்படுதனை விடுத்து, தங்களது தலைமைத்துவத்திடமிருந்து மக்களுக்கு ஏதாவது பெற்றுக் கொடுப்பதற்கு முணைய வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.

1 comment:

  1. PMJD தனித்து இயங்குவது தான் காலத்தின் தேவை அடுத்த முறையாவது தனித்து போட்டியிடுவார்கள் என்று நம்புகிறேன். அக்குரைனையின் மிகப்பெரிய தேவை நகரசபை அதை இலக்காக கொண்டு தனித்து போட்டியிட்டு பேரம் பேசி நகரசபையை அடைய நகரலாமே!

    ReplyDelete

Powered by Blogger.