Header Ads



'கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுங்கள்'

 
(எம்.எம்.ஏ.ஸமட் +  யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுங்கள் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர் அழைப்பு விடுத்தார். இன்று (5.11.2013)காலை நடைபெற்ற அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளிவிழா அங்குரார்ப்பண வைபவத்திறு;க தலைமைவகித்து உiராயாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்   அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு பிரதேசத்தின் ஆரோக்கியம் அப்பிரதேசத்தின் வைத்தியசாலையின் உன்னத சேவையில் தங்கியுள்ளது. 1988.11.05 ஆம் திகதி ஒரு மகப்பேற்று மருத்துவ மனையாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் பரிணாம வளர்ச்சிகண்டுள்ளதையிட்டு ஆனந்தமடைகின்றேன். இவ்வைத்தியசாலையின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்கெடுத்தவர் இன்றும் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் என்பதை நாம் அறிந்தது.

அவர் மாத்திமின்றி, தனது அரசியல் அதிகாரத்தினால் இவ்வதை;தியசாலைக்கு எந்தவகையிலெல்லாம் உதவ முடியுமொ அவ்வாறெல்லாம் உதவி செய்து இவ்வைத்தியசாலையை இன்றுள்ள நிலையக்கு உயர்த்தியவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் என்பதும் மறப்பதற்கில்லை.  இவ்வைத்தியசாலைக்கு மாத்திரமல்ல, இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்குமான வரலாற்று முக்கியத்துமிக்க நற்பணிகளை புரிந்த அவரின் பெயர் நிலைக்க வேண்டு மென்பதற்காக அனைவரினதும் வேண்டுகோளின் பெயரில் இவ்வைத்தியசாலைக்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தின் அரசியல் தலைமைகள் மாத்திமின்றி, பல்வேறு துறைசார்ந்தோரும் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. இவ்வைத்தியசாலையினூடாக கல்முனைப் பிரதேச மக்கள் மாத்திரமின்றி, பொத்துவில் முதல் துறைநீலானவனை வரையுள்ள சகல இன மக்களும் இவ்வைத்தியசாலையினால் நன்மையடைந்து வருகின்றனர்.

ஒரு வைத்தியசாலையின் வளர்ச்சியில் அவ்வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்களின் பங்களிப்பு மாத்திரமல்லாது, அவ்வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேச மக்களின் ஒத்துழைப்பிலும் தங்கியுள்ளது.  அந்தவகையில், இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகப்பேற்று மருத்துவ மனையாக உருவான இவ்வைத்தியசாலை பல்வேறு பெயர் மட்டங்களிலிருந்து இன்று மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் இயங்கும் வைத்தியசாலையாக விளங்கிறது.

இவ்வெள்ளிவிழா வைபங்கள், அதனுடன் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் டிசம்பர் 14ஆம் திகதி வரையும் அதன் பின்னரான தினங்களிலும் இடம்பெறவுள்ளன. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வெள்ளிவிழாவின் பிரதான வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் டாக்டர் நசீர் தெரவித்தார்

அத்துடன், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுங்கள் என வேண்டுகோள் விடுக்க விரும்புவதாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வைத்தியசாலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு வைத்தியசாலையின் பாதையாத்திரை உட்பட இன்று பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள்  என்பன ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பொதுக்கூட்டமும் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.





No comments

Powered by Blogger.