வாழச்சேனையில் 'மர்கஸுல் மலிக் பஹ்த் அப்துல் அஸீஸ் அலி சுஊத் (ரஹ்)' கலாபீடத்தின் புதிய திறப்பு விழா
(இக்பால் அலி)
பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் வாழைச்சேனை ஓட்டமாவடி தாருஸ் ஸலாம் கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தும் வாழைச்சேனை பிரதான வீதி, தியாவட்டுவானில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ' மர்கஸுல் மலிக் பஹ்த் அப்துல் அஸீ;ஸ் அலி சுஊத் (ரஹ்)' தாருஸ் ஸலாம் கலாபீடத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு விழா 16-11-2013 சனிக்கிழமை பி. ப. 4 மணிக்கு நடைபெறும் .
பஹகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா பொதுத் தலைவர் அஷ;nஷய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த அப்துல் அஸீஸ், ஹுமைன் அல் ஹுமைன், கொழும்பு சவூதி தூதுவராலயத்தின் தூதுவர் சாலிஹ் இப்னு அப்துல்லாஹ் அல்பர்ராக் சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த திஹாம் அப்துர் ரஹ்மான் அத் திஹாம் ஆகியோர்களுடன் பஹகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் தாருஸ் ஸலாம் கலாபீடத்தின் தலைவர் ஏ. எல். பீர்முஹம்மது வரவேற்புரையினையும், தாருஸ் ஸலாம் கலாபீடத்தின் அதிபர் எம். பீ. எம். இஸ்மாயீல் மதனி அறிமுகவுரையினையும் ஏ. எல். முஸ்தபா நன்றியுரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்தக் கட்டிடத் தொகுதியில் ஒரு பள்ளிவாசல், வகுப்பறை, சமையல் சாப்பாட்டறை மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஐந்து கட்டிடத் தொகுதிகள் இந்நிகழ்வின் போது திறந்து வைக்கப்படவுள்ளது. அந்தக் கட்டிடத் தொகுதிகளின் படங்களை இங்கே காணலாம்.


Post a Comment