Header Ads



முக்கிய அறிவித்தல்..!


அஸ்ஸலாமு அலைக்கும்..!

இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையமானது இறைவன் உதவியுடனும் பல்லாயிரக்ககணக்கான வாசகர்கள் ஆதரவுடனும் மீண்டும் இயங்கும். இதில் எத்தகைய சந்தேகங்களும் இல்லை. ஆனால் இயங்க ஆரம்பிக்கும் காலத்தைதான் எம்மால் திட்டவட்டமாக கூறமுடியாதுள்ளது.

அதேவேளை ஜப்னா முஸ்லிம்  இணையத்தினதும், அதன் பேஸ்புக் கணக்கினதும், மற்றும் எமது ஸ்கைப் முகவரியினதும், இலட்சிணைகள் திருடப்பட்டு, ஜப்னா முஸ்லிம் இணையத்தின் பெயரில் போலி வளைத்தளங்களும், போலி பேஸ்புக் கணக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கும் எத்தகைய தொடர்புகளும் இல்லையென்பதை இங்கு உறுதியிட்டு கூறுகிறோம். இதுதொடர்பில் வாசகர்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்துகிறோம்..!

இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் தடை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் ஒரு முஸ்லிம் பிரதியமைச்சர் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

அவ்வாறே அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

மேலும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அறியவருகிறது.

இவற்றுக்கு மேலதிகமாக முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் மீடியா போரமும் இதுதொடர்பில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் சிலரும் இவ்விடயம் குறித்து ஆராய்ந்துள்ளனர். முஸ்லிம் சமூக நல அமைப்புக்கள் சிலவும் ஜப்னா முஸ்லிம் இணையத்தின் தடை நீக்கப்பட்ட வேண்டியதான அவசியம் குறித்து ஆராய்ந்துள்ளன.

இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் மீதான தடை தொடர்ந்தாலும், தொடரவிட்டாலும் வாசகர்களின் உயர்ந்த ஒத்துழைப்புடன் மிகவிரைவாக ஜப்னா முஸ்லிம் தனது சேவையை இன்ஷா அல்லாஹ் தொடரும்...!

14 comments:

  1. அல்லாஹ்வின் அருளால் ஜப்னா முஸ்லிம் அதன் பயணத்தை மீண்டும் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இலங்கையில் தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கான மக்கள் ஜப்னா முஸ்லிமின் வருகைக்காகக் காத்து நிற்கின்றனர். எனவே துரித கதியில் சேவையை ஆரம்பிப்பதை ஆதரவு வைக்கின்றேன்.

    ReplyDelete
  2. ஜப்னா முஸ்லிமின் தடைகள் நீக்கப்பட்டு அதன் சேவைகள் தொடர எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. "Allah (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs" (Surah Ale-Imran 3:173)

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்,

    இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்து உங்கள் சிரமத்தை போக்கிவிடுவானாக! ஆமீன்.

    நாம் வாழும் சூழல் நேர்மையற்ற, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பழிவாங்கல்கள் நிறைந்த ஒரு துரதிஸ்ட வசமான காலத்திலாகும்.

    மக்கள் கருத்தை தங்கள் கருத்தாக முன்வைக்கும் ஒரு சிறந்த, நேர்மையான ஊடக நிறுவனத்தை திட்டமிட்டு முடக்கி, இவ் ஊடகத்தின் நம்பகத்தன்மையையும், உண்மையையும் நேரடியாகவே உலகறியச் செய்த இவ் (முட்டாள் ) அதிகார வர்க்கத்தை என்னவென்று சொல்வது ?

    இதில் மனவருந்த தக்க விடயம் என்னவென்றால், தங்கள் செய்திகளும், புகைப்படங்களும் இவ் ஊடக வாயிலாக மக்களை சென்றடைய வேண்டும் என்று பயனடைந்த அரசியல் வாதிகள் எங்கே?


    சத்தியம் என்றும் ஜெய்க்கும் என்பதற்கு இது ஒன்று போதாதா? இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் உதவியால், வெற்றியுடன் மீண்டு வர என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  5. யா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இன் சேவை தொடர அணைத்து வழிகளையும் திறந்து கொடுப'பாயாக.. ஆமீன்

    ReplyDelete
  6. வாசகர்களின் பிரார்த்தனை எப்போதும் ஜப்னா முஸ்லிமுக்கு உண்டு.. இச்சிறு தடைகள் அணைத்தும் பாரிய வெட்றிக்கான அறிகுறிகள்.. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  7. Great News....Ma Sha ALLAH

    ReplyDelete
  8. சிக்கல்கள் அகன்று....
    சிறப்புடன் சேவையை தொடர...
    சக்தி மிக்க வல்ல அல்லாஹ்வை....
    சிரம் பனிகின்ரேன்.... (ஆமீன்)

    ReplyDelete
  9. Sikkalhal Negi....
    Sirappudan Sevai Thodara...
    Sakthi mikka iraivanai....
    Siram Panihirean....

    ReplyDelete
  10. எனக்குத் தெரிந்த வரையில் இதுவரை இலங்கையில் இடம்பெறும் இனரீதியான வன்முறைகள் மற்றும் அரச பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறைகள் காரணமாக எழுத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வரும் வேளையில் நமது மதத்தினதும் இனத்தினதும் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் சிங்கள இரு மொழிகளிலும் இயங்கும் "ஜப்னா முஸ்லிம்" மற்றும் "அன்வர் மனதுங்க" ஆகிய இணையங்கள் இலங்கையில் தற்போது தடை செய்யப்பட்டிருந்தாலும் அவை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையோ எழுச்சியினையோ இந்த வக்கிர புத்தி கொண்ட அரசியல் கோவேறுகளால் தடை செய்ய முடியாது என்பதை அவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது.

    ReplyDelete
  11. V r always with u,may almighty help u to get rid of all dificulties & help u to go forward

    ReplyDelete
  12. May almighty allah help u to get rid of all the dificulties & help u to go forward,always v do dua 4u

    ReplyDelete

Powered by Blogger.