கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நிதி மோசடியா..?
(வெளிச்சம்)
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் இடம்பெற்ற கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ. கபூர் ஆகியோர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் ஊடகங்களுக்கு சம்பவம் தொடர்பாக விளக்கம் தருகையில் கல்லூரியில் நிதி மோசடி நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார் அல்லவா..?
இந்த நிதி மோசடியில் இக் கல்லூரி ஆசிரியர்களின் பெயர்களில் காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் அது சம்மந்தமாகவும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தாரின் குற்றச்சாட்டை கல்லூரி பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா முற்றாக மறுத்து இருந்தார்.
முக்தார் பதட்டத்தோடும் இரத்தக் கறையோடும் இருந்ததினாலும் எமது கல்லூரியின் மீது கொண்டிருந்த குரோதத்தினாலும் இக் கல்லூரியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று அவர் கூறினார் எனவும் அதிபர் தெரிவித்திருந்தார்.
ஆனால், பிரதிக் கல்விப்பணிப்பாளர் முக்தார் தனது குற்றச் சாட்டுக்கு ஆதாரமாக அது சம்மந்தப்பட்ட சகல விபரங்களையும் காசோலை இலக்கம், எழுதப்பட்ட தொகை. திகதி, எதற்காக பணம் பெறப்பட்டது என்பனவற்றை புகைப்பட பிரதியாக ஜப்னா முஸ்லிமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விபரங்கள்,
எம்.ஐ.எம். ( உதவி அதிபர் ) காசோலை இலக்கம், 193233 2013.02.08 ஆம் திகதி ரூபா 35000/= தரம் 08 மாணவர்களின் வகுப்புகளின் திருத்த வேலைகளுக்காக
1. .......................... ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193232 2013.02.08 ஆம் திகதி ரூபா 15000/= மை பூசுவதற்கான முற்பணம்.
2. ........................... ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193248 2013.05.06 ஆம் திகதி ரூபா 24500/= சுற்றாடலை அழகுபடுத்தல்.
3...................( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193249 2013.05.07 ஆம் திகதி 20000/= வகுப்பறைகளில் மின் இணைப்புகளைத் திருத்துதல்.
4........................ ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 133241 2013.04.09 ஆம் திகதி ரூபா 30000/= தரம் 6, 7 வகுப்புக்களின் திருத்த வேலைக்கு பகுதிக் கொடுப்பனவு.
5.......................... ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193240 2013.04.08 ஆம் திகதி ரூபா 48770/= கதிரை, மேசை செய்த வகையில் பெற்றுக் கொண்டது.
6................. ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193235 2013.03.15 ஆம் திகதி ரூபா 25000/= Garden Pipe Line.
7.......................... ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193234 2013.02.20 ஆம் திகதி ரூபா 35000/= கதிரை, மேசைகளுக்கு பலகை கொள்வனவு.
முக்கிய குறிப்பு கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பிவைத்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரங்களை எமது இணையம் நீக்கியுள்ளது. இருந்தபோதும் காசோலை விபரங்களை மாத்திரம் பதிவேற்றுகிறோம்.
அத்துடன் ஜப்னா முஸ்லிம் இணையம் இந்த செய்தியை பதிவேற்றம் செய்தது 05-11-2013 அன்று அதிகாலை வேளையாகும். இந்நேரத்தில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பிரதி அதிபரையோ அல்லது குற்றம்சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர்களையோ தொடர்புகொள்ள முடியவில்லை. இருந்தபோதும் அவர்கள் விளக்கம் வழங்குமிடத்து அதனையும் பதிவேற்றம் செய்ய எமது இணையம் காத்திருக்கிறது.

பெட்டிசன் மன்னர் முக்தார் அனுப்பி வைத்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கலாம்.
ReplyDeleteஆனால் உண்மையான விடயம் யாதெனில் மேற்குறிப்பிட்ட திருத்த வேலைகள் பாடசாலையில் இடம்பெற்றது அதற்கான செலவுகளை குறித்த கடைகளின் பெயர்களுக்கோ அல்லது வேலை செய்தவர்களின் பெயர்களுக்கோ எழுதப்படாமல் அதனை பொறுப்பெடுத்து செய்த ஆசிரியர்களின் பெயர்களுக்கு அதிபரால் எழுதப்பட்டுள்ளது.
உண்மையில் பாடசாலை ஆசிரியரின் பெயருக்கு சட்டப்படி காசோலை எழுதப்பட முடியாது என்ற போதிலும் இந்த நடை முறைதான் காலா காலமாக கடந்த அதிபர்களின் காலத்திலும் இருந்து வந்த நடை முறையாகும். அதனடிப்படியில் புகழ் பெற்ற பெடிசன் மன்னர் இந்த விடயத்தை பெரிது படுத்தும் வரை இவ்வாறான ஒரு சட்டம் இருப்பதை உண்மையில் ஆசிரியர்கள் கூட அறிந்திருக்கவில்லை.
பாடசாலையில் செய்யப்பட்ட வேலைகளுக்கு உரிய முறையில் பற்று சீட்டுகளை ஆசிரியர்கள் சமர்ப்பித்திருக்கும் போது இது ஒரு நிதி மோசடி இல்லை என்பதை பாடசாலை சமூகம் நன்றாக உணர்ந்துள்ளது.
பாடாசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் முன் நிற்கும் ஆரியர்களை இழிவுபடுத்தி அவர்களின் செயற்பாடுகளை மழுங்கடிக்க செய்யும் இந்த சமூக விரோதி எமது பாடசாலைக்கு எதிராக இவ்வாறன பொய்க்குற்றச் சாட்டுகளை சுமத்தி எமது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு எதிராக எமது சமூகம் குரல் கொடுத்து இக்கல்லூரியின் வளமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஐவாஹர் இப்றாஹிம் ஆசிரியருடைய பெயரை மாத்திரம் ஐப்னா முஸ்லிம் பிரசுரித்தது எதற்காக? முதலில் அவருடைய பெயரையூம் அகற்றிவிடுங்கள்
ReplyDeleteஇதில் நிதி மோசடி என்று சொல்வதற்கு உரிய ஆதாரமாக காசோலையையும் அதில் இருக்கும் ஆசிரியர்களின் பெயர்களையும் ஒரு ஆதாரமாக எடுத்துக் (ஊகித்துக்) கொண்டு ஜப்னா முஸ்லிம் இதை பிரசுரித்தது மிக மிக கவலை அளிக்கிறது.
ReplyDelete( இப்படி ஒரு தலையங்கத்தில் எங்களது உயிரிலும் மேலாக மதிக்கும் பாடசாலையையும் அதன் ஆசிரியர்களையும் அவமானபடுத்தும் நோக்கிலேயே பிரசுரிக்கப்பட்டுள்ளது)
இந்த பாடசாலையை பற்றிய இப்படியான செய்தியை பிரசுரிப்பது என்பது அந்த பாடசாலையின் மாணவர்களின் (பழைய, தற்போதைய, எதிர்கால ) நற்பெயருக்கும், நல்லொழுக்கத்துக்கும் பங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது எதிர்கால ( வேலை வாய்ப்புக்களுக்கும் ) முன்னேற்றங்களுக்கும் குந்தகமாகவும் அமைந்து விடலாம் என்பதை உரியவர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
இப்பின்னூட்டல் பிரசுரிக்கப்படும் என நம்புகிறேன்
KAASOLAI MOOLAM KODUPPANAVU SEIYAP PATTATHIL IRUNTHU, THERIYVATHU ENNAVENTRAAL MOSADI PERIYA ALAVIL NADAIPERAVILLAI., ENENTRAAL UNMAIYAAH OOLAL SEIPAVARHALINAAL IVVARAANA THOHAI PANAM AATHAARANKALA MARAIKKUM NOAKKIL PANAMAAHAVE PARIMAARA VAIPU ULLATHU.
ReplyDeleteகல்முனை கல்வி நாறுது முக்தார், நமது சாரணை அவிழ்த்து காட்டுவது போலுள்ளது, இப்படியான கீழ்த்தரமான சிந்தனயுள்ள செய்திகளை, வெளிடாமல் இருக்குமாறு திருவாளர் முக்தார் அவார்களை தயவுடன் கேட்டுகொள்கிறோம், அல்லது கழுமுனை சமூகம் இவரை ஊரை விட்டு ஒதிக்கி வைக்கவேண்டும்.
ReplyDeleteThe total sum described is amounted to about 235,000 Rs. However, we forget the actual reflection about our society's image. I want to remind that similar incident was published about the Akkaraipattu Base Hospital's MS. What we are talking about and the intention of these kind of news. In my opinion, we should not entertain of these news as the publication is caused more damages than the real scenes.
ReplyDeleteAs most of muslim brothers and same time others also have been reading Jaffnamuslim news, it is not good sense to publish these news. Since Jaffnamuslim news is giving priority to muslim related news, it is not advisable to add up thesenews in your neutral and normal news.
In this solar family, some developed countries have been robbering trillions money from innocent countries which are lack of technology and no great leaders, however no body or why even popular international medias do not want to talk about that, some how we as a small society in Srilanka, do we need to publish this?. If we really want to change our society, we need to change our people's mind with utlising different path ending with a revolution, to achieve the victory of people.
Forgive our brother's fault as Allah is more great than us.
Unless we change our society will never change....