பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரின் வேதனை
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
ஹப்புத்தலை கோட்டக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையின் அதிபாரால் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரது ஒக்டோபர் மாதத்திற்கான சம்பளக் காசோலையை கொடுக்காது மறுத்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில் தான் மேற்படி கல்வி வலயத்தில் உள்ள மிகவும் கஸ்டப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் சிறிய பாடசாலையில் ஆசிரியராக கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருவதாகவும் மேற்படிப் பாடசாலையில் ஒரே கூரையின் கீழ் பல வகுப்பக்கள் இருப்பதால் மழை காலம் வந்தாலே மிகவும் ஒரு கடினமான சூழ் நிலையில் மாணவர்கள் கல்வியை தொடரவேண்டிய ஒரு பாடசாலையாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில் நான் குறித்த பாடசாலையில் நேர்மையாகவும், கடமை உணர்ச்சியுடனும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இவ்வாறு இருக்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் எனது சம்பளத்தை எடுக்கச் சென்றபோது குறித்த பாடசாலையின் அதிபர் எனக்கு ஆசிரியர் குறிப்புப் புத்தகத்தில் நான் இன்று மாணவர்களுக்கு படிப்பிக்க வில்லை என்றும் எழுதி அதில் என்னை ஒப்பமிட்டால்தான் எனது சம்பளத்தைத் தருவேண் என்று கூற நான் அதில் ஒப்பமிடமாட்டேன் நான் மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளேன் தேவையென்றால் மாணவர்களிடம் சென்று கேட்குமாறு கூறினேன் அதற்க அதிபர் நான் கேட்கவேண்டிய தேவையில்லை என்று கூறிவிட்டு எனது சம்பளப்பணத்தை தராமல் பாடசாலையை விட்டுச் சென்றுவிட்டார்.
நான் பின்னர் பண்டாரவளை வலயக் கல்வித் திணைக்களத்திறகுகச் சென்று கல்விப் பணிப்பாளரிடம் விடயத்தைக் கூறினேன் அப்போது எனது விடயங்களை செவிமடுத்த பணிப்பாளர் குறித்த கல்விப் பணிப்பாளருக்கு தொiலைபேசி அழைப்புக்களை எடுத்தபோதிலும் அவரின் கையடக்க மற்றும் வீட்டுத் தொலைபேசிகள் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டது கண்டறியப்பட்டதுடன் வலயக் கல்விப்பணிப்பாளர் குறித்த ஆசிரியரை வீட்டுக்குப் போகும்படியும் சம்பளத்தை தான் நாளை பெற்றுத் தருவதாகவும் கூறி அனுப்பியுள்ளார்.
மறுநாள் குறித்த அதிபர் பாடசாலைக்கு வந்து குற்றஞ் சுமத்திய ஆசிரியரின் வகுப்பு மாணவர்களிடம் போய் நேற்று குறித்த அசிரியர் பாடம் கற்பிக்க வில்லைத்தானே என மாணவர்களிடம் கேட்க மாணவர்கள் ஆசிரியர் எங்களுக்கு நேற்று நல்லமுறையில் பாடம் எடுத்தாக கூறியிருக்கின்றனர். அதனைக்கேட்ட அதிபர் மாணவர்களை விரட்டி ஆசிரியர் பாடம் கற்பிக்கவில்லையென சொல்ல முயற்சித்துள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் இடங்கொடுகாததால் அதிபர் சென்றுவிட்டதாகவும் குறித்த வகுப்பு மாணவர்கள் ஆசிரியரிடம் கூறியதாக தெரிவித்தார்.
பின்னர் மறுநாளே ஆசிரியரின் சம்பளத்தை அதிபர் வழங்கியுள்ளார் மேற்படி சம்பவத்தால் நேர்மையாக கடமையாற்றும் குறித்த அசிரியர் தற்போதைய பொருளாதார கஷ்ட நிலையில் அன்று சம்பளம் கிடைக்காதால் பாரியளவில் பாதிக்கப்பட்டதுடன் மன உழசை;சல் அடைந்துள்ளதுடன் அது தனக்கு ஒரு அவமானமகவும் இருப்பதாகவும் தான் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு விடயத்தைத் தெரிவித்தம் இதுவரை எதுவித பதிலும் தனக்கு கிடைக்ககில்லையென்றும் தெரிவித்தார்.
ஒரு அரச ஊழியரின் சம்பளத்தை சும்மா அற்ப விடயங்குளக்காக வழங்க மறுப்பதும் ஒருவரின் சம்பளவிடயத்தில் தனிமனிதன் ஆதிக்கம் செலுத்துவதும் பாரிய மனித உரிமை மீறலுடன் இது அரச சட்டப்படி நீதிமோசடி விடயமாகவுNமு கருதப்படுகின்றது.
ஒரு ஆசிரியர் தவறு இழைத்தால் கல்வித் திணைக்கள நடைமுறைகளுக்கு அமைவாக அது தொடர்பாக எழுத்து மூலம் குறித்த ஆசிரியரின் குற்றத்தை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்களத்தின் ஊடாகவே ஒரு அதிபர் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆனால் இங்கு அரச முகாமைத்தவ ஒழுக்க விடயம் கையாழப்படவில்லை.
தற்கால பொருளாதார கஷ்ட நிலையில் ஒரு அரச ஊழியன் மாதச் சம்பளத்தை பல கனவுகளுடனும், ஆவலுடனுமே மாதம் மூடியும் தருவாயில் எதிர்பார்த் நிலைமைகள்தான் தற்போது உள்ளது இந்த நிலையில் ஒரு அதிபர் ஒரு ஆசிரியரின் வாழ்வாதார விடயத்தில் தடைபோடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை என சக ஆசிரியர்கள் விஷனம் தெரிவிததுதள்ளனர்.
எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனியும் ஏற்பாடாது இருக்க சம்பந்தப்பட்ட அதிபர் செய்த விடயங்கள் குறித்து வலயக் கல்வித் திணைக்களத்தால் பூரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு தனக்கு ஏற்பட்ட பாதிப்பைபயும் போக்கவேண்டும் எனவும் இவ்விடயம் ஒரு பழிவாங்களாகவே உள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவிக்கின்றார்.
.jpg)
இதுவும் ஒருஅதிபருக்குரிய தமைதானாக்கும் .இதர்கெல்லாம்ஒரே மருந்து எல்லா மாணவா்களும் சோ்ந்து சாத்துசாத்துண்டு சாத்துவதுதான்எவண்டயாலும் வாலப்பிடித்து அதிபராகி இருப்பான்
ReplyDelete