Header Ads



கண்ணீர் சிந்திய ஜனாதிபதி

மாற்றுத் திறனாளிகளின் கலைத் திறமைகளை பார்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்ணீர் சிந்திய சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு சமாந்திரமாக நடைபெறும் இளைஞர் மாநாடு நேற்று ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி இவ்வாறு கண்ணீர் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத் திறன்களைக் கொண்ட இளைஞர் யுவதிகள் இணைந்து பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனின் ஹீல் தி வேர்ல்ட் என்ற பாடலைப் பாடினார்கள். முக பாவனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இளைஞர் யுவதிகள் பாடலைப் பாடியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அனைவரும் பலத்த கரகோசம் எழுப்பி, பாராட்டு வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சியை பார்வையிட்ட ஜனாதிபதி கண்ணீர் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.