Header Ads



தனியார் பஸ் சாரதிகள் கைத்தொலைபேசி பாவிக்கத் தடை - முறைப்பாட்டை 1955 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்கலாம்

(Nf) சேவையில் ஈடுபடும் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தும் தனியார் பஸ் ஊழியர்களின் சேவைக்கால அடையாள அட்டையை இரத்துச்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சாரதிகள் தொடர்பான முறைப்பாடுகளை 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியுமென அமைச்சர் சீ.பி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து கட்டளைச் சட்டத்தின் கீழ், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் தண்டனைக்குரிய குற்றமெனக் குறிப்பிட்ட அமைச்சர், அதற்கான சட்டவரைபு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக, கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்தமுடியாது எனவும், இந்த சட்டம் சகல சாரதிகளுக்கும் பொதுவானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.