Header Ads



இந்த 10 மாத குழந்தைக்கு அவசரமாக உதவுங்கள்..!

மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது முபாறக் ,பாத்திமா ரிஸானா ஆகியோரின்   முஹம்மட் சாஹீர் (10மாதம்)   எனும் குழந்தை கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தையின் நோய்க்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு குழந்தையின் பெற்றோர்களால் பல்வேறு தரப்பினரிடம் இருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்து 10 மாதங்களான இக்குழந்தைக்கு மூளைக்கு செல்லும் இரு நரம்புகள் செயலிழந்து காணப்படுவதுடன்,இதயத்தில் துவாரமும் காணப்படுவதாக குழந்தையை பரிசோதித்த வைத்தியரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் குழந்தையின் இரத்தம்,சிறுநீர் பரிசோதனை வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளவுள்ளதால்  பெற்றோர்களால் அத்தொகையை ஈடுசெய்ய முடியாதுள்ளது.

எனவே இக்குழந்தையின் சிகிச்சைக்கு உதவ முன்வருபவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு குழந்தையின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். குழந்தையின்  பெற்றோர்  கூலி வேலை அன்றாடம் மேற்கொள்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.எம் முபாறக்(தந்தை)
0773860024

கணக்கிலக்கம்:
எம்.எப்.எப்.ரிஸானா
8090022917
கொமர்சல் வங்கி
கலேவெல.








2 comments:

  1. அல்லாஹு த ஆலாவின் சோதனைகள் யாருக்கு ஏற்படும் என்பதையோ, ஏன் ஏற்படுகின்றன என்பதையோ அறிந்தவர்கள் இலர். ஒன்றுமறியாத பச்சிளம் பாலகனான இந்தக் குழந்தை செய்த தவறுதான் என்ன...? இந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வாறு ஏற்பட வேண்டும்..? அந்த அல்லாஹ்வே அறிந்தவன்.

    பொருளாதார வளமின்றிக் கஷ்டப்படும் மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டுமென ஏங்குவோரிடம் வசதிகள் இருப்பதில்லை. வசதிகள் இருக்கும் மிகப் பலரிடம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருப்பதில்லை.

    அதிகமான துன்பம் ஒருவனை ரித்தத் (மத மாற்றம்) வரை கொண்டு சேர்க்குமென்பது நபி மொழி. துன்பத்தில் உழல்வோருக்குத் தக்க உதவிகளை வழங்கி, அத்தகு நிலைமையிலிருந்து பாதுகாக்க வசதி படைத்தவர்கள் முன்வர வேண்டும்.

    கஷ்டத்தில் இருப்போருக்கு உதவி செய்யும்படி நமது சத்திய மார்க்கம் போதித்திருக்கும் அளவுக்கு வேறெந்த மார்க்கங்களும் போதனை செய்யவில்லை. மற்றவர்க்குச் செய்யும் உதவிகளுக்குப் பதிலாக அல்லாஹ் பல மடங்கு நற்கூலி தருவதாக வாக்களித்திருக்கிறான். வறுமையிலும் துன்பத்திலும் வாடுவோருக்கு உதவி செய்ய அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டோர் ஒரு போதும் பின்னிற்க மாட்டார்கள்.

    முடிந்தவர்கள் இந்தக் குழந்தைக்கு உதவுங்கள்; மற்றவர்களிடமும் இந்தச் செய்தியைக் கூறுங்கள். தம்மால் முடியாதவர்கள், இந்தக் குழந்தையின் நல வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    இணையற்ற அல்லாஹ் எல்லோரது வாழ்க்கையிலும் சந்தோஷங்களைத் தருவானாக; ஆமீன்!

    ReplyDelete
  2. அன்பின் சகோதரர் முபாரக்

    நான் இந்த குழந்தைக்கு முழுமையாக உதவ தயாராக உள்ளேன். ஆனால் நீங்கள் என் பிரச்சனை சீக்கிரம் தீர்மானம் ஆக அல்லாஹ்வை வேண்ட வேண்டும். அதாவது என்னுடைய எனக்கு சொந்தமான நிதியை சீக்கிரம் பெறுவதற்கு. என்னுடைய தூய எண்ணத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான்.

    நான் உங்கள் இடத்திற்கு மிக நெருக்கமாகதான் வாழ்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.