Header Ads



ஜிந்தோட்ட Young Muslim Association அமைப்பின் இரத்ததான முகாம்


Gintota Young Muslim Association (GYMA) அமைப்பின் மற்றுமொறு சமூகசேவை நிகழ்ச்சித் திட்டமாக, காலி காராபிட்டிய வைத்தியசலை இரத்த வங்கியுடன் இனைந்து நடத்தும் இரத்ததான முகாம் முதன்  முறையாக கிநதோட்டையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

காலம் 02.011.2013 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல்
இடம்  கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி வளாகம்......

இரத்த தானம் கொடுப்போர் அறிந்துகொள்ளவேண்டியவை

ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லீட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.


இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 1. மேக நோய் 2. நீரழிவு நோய் 3. இரத்த அழுத்தம் 4. வலிப்பு நோய்
முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

“அன்றி எவன் ஓர் ஆத்மாவை வாழவைக்கின்றானோ அவன் மனிதர்கள் யாவரையும் வாழவைத்தவன் போலாவன்” (அல் குர்ஆன் 5:32)



No comments

Powered by Blogger.