Header Ads



மத்திய கிழக்கு நாடுகளுக்கு பப்பாசி பழம் ஏற்றுமதி.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

யுத்தத்திற்குப் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வவுனியா விவசாயத் திணைக்களமும் ஐ.எல்.ஓ நிறுவனமும் இணைந்து தெரிவு செய்யப்பட்ட 200 விவசாயிகளுக்கு ஐ.எல்.ஓ நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கி மேற்படி பழச் செய்கை சிறந்த முறையில் மேற் கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் திருமதி அஸ்கர் சைலா பானு தெரிவித்தார்.

மேற்படி 200 பேரையும் வைத்து பழ உற்பத்தியாளர் சங்கம் ஒன்றை ஏற்படுத்தி இவர்களுடன் சி.ஆர் ஏற்றுமதி நிறுவனத்துடன் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பப்பாசி பழத்தை ஏற்றுமதி செய்வதாகவும் இதன் மூலம் ஒருவர் மாதம் ஒன்றிற்கு இருபத்தி ஐயாயிரம் ரூபா தொடக்கம் முப்பதாயிரம் ரூபா வரை வருமாணம் பெறுவதாகவும் மேற்படித் திட்டத்தில் பெண்களை தலைமையாகக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் பானு தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பழங்களை சேமிக்கவும் மற்றும் பழச்சாறு வகைகளை தயாரிக்கவுமெனவும் வவுனியா புளியங்குளத்தில் ஒரு தொழிற்சாலையும் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.