Header Ads



பலதார மணத்துக்கு சவுதி அரேபிய பெண்கள் ஆதரவு..!

(சுவனப்பிரியன்)

ஒரு ஆண் வசதியும் உடல் ஆரோக்கியமும் இருக்கும் பட்சத்தில் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் முடிக்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை உலக முஸ்லிம்களில் 90 சதவீதமான பேர் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் ஒரு மனைவியையும் அதற்கு பிறக்கும் குழந்தைகளையும் படிக்க வைத்து ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் அனேக முஸ்லிம்களுக்கு. எனவே இஸ்லாம் அனுமதித்தாலும் இந்த வாய்ப்பை பலரும் பயன் படுத்துவதில்லை. 

சவுதியில் கூட மிக சொற்பமான நபர்களே பலதாரமணம் புரிபவர்களாக உள்ளனர். உலகம் முழுவதுமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடே மிகைத்துள்ளதால் அது சவுதியிலும் பிரதிபலிக்கிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்களாக ஆனவுடன் தந்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தை வெறுக்கின்றனர். முதல் மனைவியும் அனுமதிப்பதில்லை. நம் நாட்டிலும் இஸ்லாமியர்கள் இந்த பலதார மணத்தை சற்று தூரமாக்கியே வைத்துள்ளனர். இது பரவலாக உலகம் முழுவதும் உள்ளது.

ஆனால் சவுதியில் அதிசயமாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சில கல்லூரிப் பெண்கள் பலதாரமணத்தை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளனர். ட்விட்டர் குழுமத்தில் இந்த செய்தி சுற்றுக்கு விடப்பட்டதால் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த கருத்துகளுக்கு சவுதி பெண்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

'இந்த நாட்டில் திருமணம் ஆகாமல் தேங்கி கிடக்கும் பல லட்சம் முதிர் கன்னிகளின் விடிவு பலதார மணத்திலேயே உள்ளது.' என்று பெண்கள் தரப்பிலிருந்தே கோரிக்கை வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலதார மணத்தால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்: அவர்களின் உரிமை மறுக்கப்படுகின்றனது: என்ற வாதம் பெண்ணிய வாதிகளால் வைக்கப்படுகிறது. ஆனால் திருமணம் ஆகாமல் வீட்டிலே முடங்கிக் கிடக்கும் அந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலை அவர்கள் வைத்துள்ளார்கள்? 

மெக்காவில் மட்டும் 396248 முதிர் கன்னிகள் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. அதே போல் ரியாத் மற்றும் தம்மாம் ஏரியாக்களில் மட்டும் 327427 முதிர் கன்னிகள் இருப்பதாக அரசு கூறுகிறது. பெண்ணியம் பேசுபவர்கள் இந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?

சுலதான் அல் சுபயீ சவுதி நாட்டவர்: பலதார மணம் குடும்பத்தில் பல சிக்கல்களை கொண்டு வருகிறது. எனவே நான் ஒரு மனைவியுடனேயே வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

இகோயிங் சவுதி நாட்டவர்: முதல் மனைவியையும் பின்னால் கட்டக் கூடிய மனைவிகளையும் சமமாகவும் நீதமாகவும் நடத்தத் தெரிந்தவர்களே பலதார மணத்தின் பக்கம் செல்ல வேண்டும். இஸ்லாம் இதனையும் விரும்புகிறது. 

சாமியா சவுதி பெண்மணி: பலதார மணம் வேறொரு சிக்கலையும் கொண்டு வரும். ஒவ்வொரு மனைவிக்கும் எட்டு குழந்தைகள் என்றால் ஒரு ஆணுக்கு 32 குழந்தைகள் ஆகி விடும். இந்த அதீத மக்கள் பெருக்கமானது மேலும் பல சிக்கல்களை கொண்டு வரும் என்கிறார்.

பெண்கள் அதிகமாக மஹர் கேட்பதும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்து விட்டதும் சவுதி இளைஞர்கள் திருமணம் முடிக்க தடையாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே அரசு சவுதி இளைஞர்ளுக்கு திருமண உதவி திட்டங்களை இன்னும் அதிகமாக்கி அந்த முதிர் கன்னிகளின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்களாக!

தகவல் உதவி:

சவுதி கெஜட்

1 comment:

  1. inku muthal muslim muslimaka natankal 100% illattilum 50%natakka muayatchi saiunkal allah unkalukku nal vali kartuvan insa allah intha naattil i mean riyath damam intha oorkalil evvalavu sampavankal natakkirathu oru muslim iraivainai manathal payanthu kondal avan entha thavar saia mutpatumpothum iravainai payanthu kollum pothu antha thappu thavikkappatukirathu enathu muslim sakothara sakotharikale 1st iraivanai pray pannunkal veen viryam saiytheerkal ithanai thavirthal neenkal sollum koottu sariya varum insa allah thirumam natakkamal irukkum antha enathu sakotharikalukkum thirum natakkalam insa allah naan ethum thappa sollirunthal ennai maaiunkal pls allahu akbar

    ReplyDelete

Powered by Blogger.