Header Ads



நடுவானில் பறந்த விமானத்தின் கதவு கழன்று விழுந்தது

அமெரிக்காவில், நடுவானில் பறந்த விமானத்தின் கதவு கழன்று, ஓட்டலின் கூரை மீது விழுந்தது. அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், மான்டரி விமான நிலையத்திலிருந்து, கடந்த வாரம், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. இதைஅடுத்து திரும்பி பார்த்த பைலட், விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். 

விமானத்தை தாழ்வாக பறக்க செய்து, கதவு எங்கே விழுந்திருக்கிறது, என்று தேடினார். இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால், விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு, விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். 

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள, ஓட்டல் உரிமையாளர், தன்னுடைய ஓட்டல் மீது, விமானத்தின் கதவு விழுந்ததாக, போலீசாரிடம் தெரிவித்தார். நல்ல வேளையாக, சேதமடைந்த ஓட்டல் கூரையின் அடியில் யாரும் இல்லை. இருப்பினும், விமான கதவு எப்படி கழன்று விழுந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.