Header Ads



மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் நடாத்திய அல்-குர்ஆன் போட்டியில் பரிசளிப்பு


(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார  மையம் நடாத்திய அல்-குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் மார்கச் சொற்பொழிவும் (26-10-2013) பெரிய நீலாவணை மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய பிரச்சார  மையத்தின் தலைவர் அஷ்செய்க் எம்.எல். முபாறக் மதனி, தலைமையில் நடைபெற்றது. 

இதில் அஷ்செய்க் எம்.எல். முபாறக் மதனி, அஷ்செய்க் எஸ்.எச்.எம்.முஜீப் ஆகியோர்  விஷேட உரையாற்றினார்கள். மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.எம்.பாறுக் மருதமுனை இஸ்லாமிய பிரச்சார  மையத்தின் உப தலைவர் எஸ்.எல்.பகுறுதீன் ஆசிரியர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இப்போட்டியில் 450 பேர் பங்குபற்றி 35 பேர் 100 புள்ளிகளைப் பெற்றுள்ளனா.; மேலும் 114 பேர் 95 புள்ளிகளைப்பெற்றுள்ளனர். 100 புள்ளிகளைப் பெற்றவர்களில், 1ம்,2ம்,3ம், இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட எம்.எல்.நஜிமா, ஏ.எஸ்.நழிபா,ஏ.எல்.எம்.லுஹ்னா ஆகியோருக்கு அதிதிகளாகக் கலந்து கொண்ட நௌசாத் பைரூஸா,கமறுத்தீன் பாரிஜா,அன்சா ஹப்ஸா ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தனர். பெருந்தொகையான பெண்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.