Header Ads



'என்னை நீக்கக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்கு இல்லை' – ஆளுனர் சந்திரசிறி

தன்னை ஆளுனர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம்இ வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. 

இராணுவப் பின்னணி கொண்டவர் ஆளுனராக வடக்கிற்குத் தேவையில்லை என்றும், அவரை நீக்கி விட்டு, சிவில் ஆளுனர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்றும், வடக்கு மாகாணசபையின் முதல்நாள் அமர்வில் உரையாற்றிய, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி,

'மாகாணத்தின் ஆளுனர், ஜனாதிபதியின் பிரதிநிதி. எனினும் சிலர் ஆளுனரை நீக்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அது நடக்கப் போவதில்லை. வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே அங்கே இருக்கிறேன்.  என்னை நீக்கக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்குக் கிடையாது.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Tamil people trying to remove MR also , your matter is not a serious .

    ReplyDelete

Powered by Blogger.