Header Ads



கல்முனை மாநகர சபை மேயர் விவகாரம் - ஹக்கீம், சேகுதாவுத், ஜெமீல் பதில் சொல்லவேண்டும்

கல்முனை மாநகர சபை முதல்வர் விவகாரத்தில் இன்று ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கான முழுப்பொறுப்பையும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமும் தவிசாளர் பஸீர் சேகுதாவுத் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் கல்முனை சமாதான செயற்பாட்டுக்குழுவின் தலைவர் ஏ.பி.எம். அஸ்ஹர் தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பாக மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,

கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு இந்த இழுபறி நிலை ஆரம்பமானது.வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது கூட இழுபறிக்கு மத்தியில்தான்.கட்சியின் கல்முனை அதிகாரப்பிரதி நிதயும் மற்றும் கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமா எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் கூட  கட்சிக்கும் சமுகத்திற்கும்  விசுவாசமான மற்றும் தகுதியானவர்களை வேட்பாளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு எத்தனித்தும் அது முடியாமல் போகவே இந்நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்தது யாவரும் அறிந்த உண்மை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காஙகிரஸைப் பொறுத்தவரைக்கும் பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் உன்ற எண்ணப்பாடு தற்போது அதன் ஆதரவாளர்களிம் காணப்படுகின்றது. இதுவே கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத்;தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் தாக்கம் செலுத்தியது.கட்சிக்காக உயிர்த்pயாகங்கள்  மற்றும் உடல்தியாகங்கள் செய்து இன்றும் என்றும் நாரே தக்பீர் கோசத்துடன் கட்சிக்காக மரணிக்கக்காத்திருக்கும் பலர் இக்கட்சியில் இருக்க வெறுமனே பணத்தகுதி மட்டும் இருந்தால் போதும் என்று கருதியதனால் ஏற்பட்டதன் விளைவை இரண்டு வருடங்கள் கழித்து இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காஙகி;ரஸ் அனுபவிக்கின்றது.

கனவான் ஒப்பந்தங்கள் என்பதெல்லாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காஙகிரஸிற்கும் அரசுக்குமிடையிலான ஒப்பந்தங்கள் போன்று (நிறைவேறுவதுமில்லை நிறைவேற்ற முயற்சிப்பதுமில்லை) இறக்காமத்திற்கு இதுசரி. அங்குள்ளவர்கள் கனவான்கள்.

 கல்முனையைப்பொறுத்தவரையில் இன்றுள்ள சூழ்நிலையில் மேயராக யார் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகலாம் ஆனால் இவர்களைவிட ஒரு தமிழ் மகன் மேயராக வரட்டும் என்று நமது மக்கள் எண்ணும் அளவுக்கு நிலைமையை மாற்றிவிடாதீர்கள். அதேபோல் உங்களின் அற்ப சொற்ப அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் பிரதேசவாதங்களைக்கிளப்பி அதில் குளிர்காயாதீர்கள்.

தவிசாளர் பஸீர் சேகுதாவுத் இவர் தற்போது கட்சிக்குள் இருக்கின்றார அல்லது கட்சிக்கு வெளியே இருக்கின்றாரா என்று யாருக்கும் புரியவில்லை இவர்தான் இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்குமுக்கிய காரணம்.

தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறுபவர்களுக்கே மேயர் பதவி வழங்கப்படும் என வாக்களித்தார். (இன்று அவரது நிலை முழு அமைச்சப் பதவியை நிம்மதியாக அனுபவிக்கமுடியாத நிலையில் அவர் உள்ளார் அது வேறு கதை) இவரது உரைதான் சாய்ந்தமருது மக்களை மேயரைப்பெறத் தூண்டியது. 

அதே போன்று தற்போதுள்ள மேயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்தேயாகவேண்டும் என்று அடம்பிடித்தவரும் தற்போது இவரை என்ன விலைகொடுத்தாவது அக்கதிரையிலிருந்து  கழற்றியாகவேண்டும் எனத் துடித்துக்கொண்டிருப்பவருமான ஏ.எம்.ஜெமீலும் இன்றைய சூழழுக்கான முக்கிய காரணகர்த்தாக்களாகும். எது எப்படியோ தற்போதைய மேயரைப்பொறுத்தவரைக்கும் சிறந்த நிருவாகி என்பதை கல்முனை மாநகர சபையின் அவரது கன்னியுரையின் போது வெளிக்காட்டியதுமட்டுமல்லாமல் தொடர்ந்தும் சிறப்பான முறையில் சேவையாற்றிவருகிறார்.அதே போன்று மேயர் பதவியைப்பெறக் காத்திருக்கும் தற்போதைய பிரதி மேயரைப் பொறுத்தவரைக்கும் தலைசிறந்த சட்டத்தரணி மேயர் பதவி கிடைத்தால் தொடர்ந்து ஊரிலிருந்து சேவை செய்யக் காத்திருப்பதாகக் கூறுகின்றார்.  அவர் தலைவிதியில் மேயர் பதவி எழுதப்பட்டுள்ளதா என்பதற்கான விடையை அறிந்து கொள்ள இன்னும் சில நாட்களே உள்ளன இன்ஸாஅல்லாஹ்.

No comments

Powered by Blogger.