Header Ads



வடமாகாணம் குறித்து ஹூனைஸ் பாறுக் எம்.பி. கொரியத் தூதுவருடன் சந்திப்பு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக் இன்று (28) இலங்கையில் உள்ள கொரியத் தூதுவரை தூதுவரின் அலுவலகத்தில் சந்தித்து வடமாகாண மக்களின் பல்வேறுபட்ட  அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போது கொரியத் தூதுவர் அர்ஜூனா ஜோங் மூன் சோய் எதிர் 2014இல் வடமாகாணத்திற்கான வடமாகாண சபைக்குரிய கட்டிடத் தொகுதியை தமது அரசாங்கத்தால் கட்டித் தருவதாகவும், கொரிய வேலை வாய்ப்புக்கு வடமாகாண இளைஞர்களை உள்வாங்குவதன் பொருட்டு வடமாகாணத்திலும் கொரிய மொழிப் போதனையை நடாத்தி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்தாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.