Header Ads



என்னைக் கொன்றாலும் பரவாயில்லை, ஆனால் எனது பண்புகளைக் கொன்று விடாதீர்கள் - அஸாத் சாலி

என்னைக் கொன்றாலும் பரவாயில்லை ஆனால் எனது பண்புகளைக் கொன்று விடாதீர்கள். முன்னாள் ஜனாதிபதி கூறியதையே நானும் கூற விரும்புகின்றேன்- அஸாத் சாலி தலைவர் தே.ஐ.மு. உறுப்பினர் ம.மா.ச

என்னுடைய அரசியல் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத,நான் தலைமை தாங்கும் தேசிய ஐக்கிய முன்னணியின் துரித வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத, அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சில அரசியல் வாதிகள் தமது அரசியல் செல்வாக்கை தப்பாகப் பிரயோகித்து எனக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரை தூண்டிவி;டுகின்றனர். துரதிஷ்டவசமாக ஊடகங்கள் சிலவும் இதற்கு துணைபோகின்றன என்று கூறினார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி. நேற்று மாலை அவர் தனது கொழும்பில் உள்ள இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து அவர் பேசிய போது:

நான் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவையும் அதன் பிறகு முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கிய ஆதரவையும் வாபஸ் பெற்றது முதல் என்மீது வீண் பழி சுமத்தி சமூக நலன் சார்ந்த எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருகின்றன.

தற்போது என்மீது பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் நான் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் சில அரசியல் வாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. என்மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்த இந்த அரசியல் வாதிகளும் அவர்களுக்கு வால்பிடிக்கும் ஊடகங்களும் பல முயற்சிகளை எடுத்து தோற்றுப் போயுள்ள நிலையில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சொற்பத் தொகை பணத்துக்கு நான் மோசடி செய்ததாகக் கூறி சுகாதாரத் துறை சிற்றூழியர் ஒருவரைக் கொண்டு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்;. இதுவரை யாரும் என்மீது எந்த முறைப்பாடும் செய்ததில்லை என்று நான் வசிக்கும் பிரதேசமான கொள்ளுப்பிட்டி பிரதேச பொலிஸ்; மற்றும் வெள்ளவத்தையில் உள்ள மோசடி விசாரணைப் பிரிவு என்பன எனக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலேயே இந்த பொய் முறைப்பாடு எனக்கு எதிரக செய்யப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக எனது அரசியல் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் என்னை கொலை செய்வதற்கு அடியால் ஒருவருக்கு ஒப்பந்தம் ஒன்றை அளித்துள்ளதாகவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது.இன்னும் ஒரு முஸ்லிம் அமைச்சரும் தனது தலைமைத்துவத்துக்கு நான் சவாலாக மாறி வருவதாகக் கூறி எனது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகக் கங்கனம் கட்டியுள்ளாராம். என்னுடைய வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு எனக்கு பல லட்சம் ரூபாய்களை மோசடிபுரிந்த, நடை, உடை, பாவணை என எல்லாவற்றிலும் ஒரு கோமாளியாக வலம் வந்து கொண்டிருக்கும் மேல் மாகாணத்தின் கோமாளி என வர்ணிக்கப்படும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் இவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்.இவர் எனக்கிழைத்த மோசடியில் இருந்து மஜிஸ்திரேட் நீதிமன்றம் இவரை இப்போதைக்கு விடுவித்திருக்கலாம். ஆனால் நாட்டில் அதைவிட மேல் மட்ட நீதிமன்றங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கோமாளி மறந்து விடக் கூடாது.விரைவில் நான் அவரை அங்கு சந்திப்பேன். வாத்தக ரீதியாக இந்த நாட்டுக்கு துரோகம் இழைத்து கடத்தல் தொழிலும் பந்தயத் தொழிலும் நடத்தி கோடிக்கணக்கில் ஏப்பம் விட்டு சிறை சென்ற தந்தையின் வழித் தோன்றல் அல்ல நான்.

துணிச்சலும் நேர்மையும் கொண்ட மக்கள் சேவைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் வாதிகளாக இருந்தால் எனது அரசியல் கருத்துக்களுக்கு பதில் அளியுங்கள்.இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளை கருத்து ரீதியாக எந்தக் களத்திலும் எந்த நேரத்திலும் சந்திப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.எனக்குள்ள மக்கள் ஆதரவைக் கொண்டும் எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டும் அரசியல் ரீதியாக இந்த நாட்டின் முஸ்லிம் தலைமைகளுக்கு பதில் சொல்லும் துணிச்சல் எனக்கு ஏராளமாக உள்ளது.

ஆனால் அரசியல் ரீதியாக என்னை சந்திக்க திராணியற்று,எனது குரல் வளையை நசுக்க முனையும் அரசின் சதித் திட்டத்தில் நீங்களும் பங்காளியாக வேண்டாம் என்று முஸ்லிம் அரசியல் வாதிகளைக் கேட்டுக் கொள்கிறேன். இன்று எனக்கு எதிராக உங்களைத் தூண்டிவிடும் அரசு நாளை உங்களுக்கு எதிராக இன்னொரு நயவஞ்சனளைத் தயார் செய்யும் என்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச தான் கொலை செய்யப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது 'என்னை வேண்டுமானால் கொன்று விடுங்கள் அனால் நான் சிறு வயது முதலே கட்டிக் காத்து வரும் எனது பண்புகளைக் கொலை செய்து விடாதீர்கள்' என்று உறுக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்தார்.அன்று அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். அதே கூற்றை தான் நானும் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

3 comments:

  1. 6 லட்சம் ரூபாய்க்கு கடிகாரம் கட்டுகின்றீர்கள், மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இசைக்குழுவினர் நடன இசை வழங்க லட்சக்கணக்கில் செலவழித்து படு ஆடம்பரமாக நடத்துகின்றீர்கள், இதுவரை ஜேவிபி தவிர இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு விட்டீர்கள்.

    உங்களுடைய panpukal என்று எதனை சொல்லிகிண்றீர்கள்? அப்படி ஏதாவது இருக்கின்றதா? இருக்க முடியுமா?

    ReplyDelete
  2. already told Ex. president R, Premadase. first teach Islam for you family and after you will become a Muslim leader.

    ReplyDelete
  3. Well say bro.he is acting.his behaviour very bad.he dont know how to talk tamil n he think tooooooo much.i mean muslim leader

    ReplyDelete

Powered by Blogger.