Header Ads



கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் வெளியீட்டு விழா (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)                   

கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய பாம்புகள் குளிக்கும் நதி கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை  27-10-2013 இலங்கை தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக நிதியமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹஸன் அலி, ஹூனைஸ் பாறுக், எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜீட் உட்பட பல கலை, இலக்கிய ஆர்வளர்கள், ஊடகவியலாளர்கள,; கல்விமான்களும் கலந்து கொண்ட நிகழ்வு இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் நூலின் ஆய்வினை தமிழ் தென்னறல் அலி அக்பரும், கவிவாழ்த்தினை கவிஞர் கிண்ணியா அமீரலியும் வழங்கியதோடு நூலின் முகப்புத்தோற்றத்தினை பிரதம அதிதி முன்னிலையில் வெளியிடப்பட்டதுடன் முதல் பிரதியை புரவலர் ஹாஸிம் உமர் பிரதம அதிதியிடமிருந்து பெறுவதனையும், ஏனைய பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் உட்பட வருகை தந்த பிரதிநிதிகள் வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் பிரதம அதிதி ரவுப் ஹக்கீம் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாறுக் ஆகியோர் உரை நிகழ்த்தவதையும் நிகழ்விற்கு வருகை தந்தவர்களையும் படங்களில் காணலாம்.




No comments

Powered by Blogger.