Header Ads



கட்டுநாயக்க கொழும்பு அதிவேகப் பாதையில் பயணித்த முதல் நபர் - தெரு நாய்களும் அகற்றம்

(Riswan Khalid)

கட்டுநாயக்க  கொழும்பு அதிவேகப் பாதையில் முதன் முதலாக கோட்டே பிரதேச ஒரு பொறியியலாளரின் பீ எம் டப்ளிவ் வண்டிக்கே சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் மாலை 6 மணிக்கு வாகன  வரிசையில் முதலில் நின்ற போது பின்னால் நுற்றுக்கணக்கான வாகனங்கள் இருந்தன.

வீதியின் பாதுகாப்பிற்கு 188 போலீசார் கடமையில் உள்ளன.55 பாதுகாப்புக்  கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனிடையே வீதியில் இருந்த  100 கட்டாக்காலி நாய்களை அகற்றியதாகவும்இ இன்னும் 30 நாய்களுக்கு இனப்பெருக்கத்தைத் தடுக்க சத்திர சிகிச்சை செய்ததாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் மிருக வைத்தியர் நுவான் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வேண்டுகோளுக்கிணங்க இந்நிறுவனம் நாய்களை அகற்றியுள்ளது.

No comments

Powered by Blogger.