Header Ads



இலங்கை அரசாங்கத்திற்கு அவுஸ்ரேலிய பிரதமர் நன்றி தெரிவிப்பு

அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மிகமுக்கிய பிரச்சினையாக இருந்த ஆட்கடத்தலை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு முயற்சிகள் குறித்தே அவர் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறவுள்ள பொது நலவாய மாடுகள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கும் பொருட்டு, அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்மிரல் திசிர சமரசிங்க, அவுஸ்ரேலிய பிரதமரை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

இதன்போதே அவுஸ்ரேலிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.