அஸ்வரை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவோம் - மனோ கணேசன்
மனோ கணேசனின் பேபுக்கிலிருந்து..!
ஆளுகின்ற அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை பெருந்தன்மையுடன் மன்னித்து இத்துடன் விட்டு விடுவோம். அவர் செய்த தவறை உணர்ந்து தன்னை திருத்திகொள்ள அவருக்கு சந்தர்ப்பம் வழங்குவோம். இந்த விவகாரம் தொடர்பாக, பெருந்தொகையான அன்புள்ளங்களுக்கு சொந்தகாரர்கள் அஸ்வருக்கு கண்டனத்தையும், எனக்கு ஆதரவையும் (அல்லது ஆறுதலையும்) தெரிவித்து வருகின்றார்கள்.
நாடு முழுக்க இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் எக்கச்சக்கமான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், முகநூல் பதிவுகள், நேரடி அழைப்புகள் மூலம் தங்கள் மன உணர்வுகளை தெரிவித்து கொண்ட பண்புள்ளங்களுக்கு என் நன்றிகள். குறிப்பாக பெருந்தொகையான பண்புள்ள முஸ்லிம் சகோதரர்கள் பதைபதைப்புடன் செய்திகளை அனுப்பி கொண்டுள்ளார்கள். இன்னும் பலர் இணைய மற்றும் அச்சு ஊடகங்களிலும் தங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆரம்பத்தில் பலருக்கு அவர்கள் தொடர்புகொண்ட மார்க்கத்திலேயே பதில் அளித்து கொண்டிருந்தேன். தற்போது இது பெருந்தொகையாக மாறிவிட்டதால் ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க எனக்கு சாத்தியப்படவில்லை. எனவே எனது இந்த முகநூல் பதிவு மூலமாக எனது நல்லெண்ணத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
அஸ்வர் அவர்கள் "ஹிரு" தொலைக்காட்சியில் இடம்பெற்ற பகிரங்க நேரடி நிகழ்வு ஒன்றில் தகாத வார்த்தை பிரயோகம் செய்து என்னை திட்டியிருந்தார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குரல் எழுப்ப (அல்லது போராட) வேண்டாம் என்று எனக்கு கூறியிருந்தார். என்னை தமிழ் (அல்லது ஹிந்துக்களின்) பிரச்சினைகள் பற்றி மட்டும் பேசும்படி (அல்லது போராடும்படி) கூறியிருந்தார். முஸ்லிம் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் தொடர்பில் தான், ஒரு தமிழருக்கு (அல்லது முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு) பதில் அளிக்க தயார் இல்லை என்றும் சொல்லி இருந்தார்.
ஆரம்பத்தில் அஸ்வரின் சொல்லாடலை கேட்டு எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் கொஞ்சம் மன வருத்தம் தோன்றி சட்டென மறைந்தது. பின்னர் சிரிப்புதான் வந்தது.
நீண்ட நாட்களுக்கு முன்னரே நான் கொஞ்சம் உள முதிர்ச்சி அடைந்துவிட்டேன் என எண்ணுகின்றேன். புகழ்ச்சியால் அதிகம் பரவசம் அடையாமலும், இகழ்ச்சியால் வருத்தமடையாமலும், அச்சறுத்தலை கேட்டு கலவரமடையாமலும், நிகழ்வுகளின் இறுதி கணத்தில் நடந்தைவைகளை எண்ணி சிரிக்கவும் என் வாழ்வின் அனுபவங்கள் எனக்கு கற்று கொடுத்துள்ளன என எண்ணுகின்றேன்.
எல்லாவித பேதங்களையும் புறந்தள்ளிவிட்டு அநீதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டே இருப்போம். நன்றி.

ஒரு நல்ல மனிதருக்கு எடுத்துக்காட்டு ஐயா மனோகணேசன் ..... ஒரு முஸ்லிம்.....? அரசியல்வாதி....? எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு அஸ்வர்.....!
ReplyDeleteகௌரவ மனோ கணேசன் அவர்களே உங்களின் பெருந்தன்மையை பாராட்டுகிறோம். உன்மையில் அஸ்வர் அவர்களின் அந்த ஆக்ரோசமான பேச்சு உங்களின் குறுக்கீட்டால் ஏட்பட்டதல்ல என்பதை புறிந்து கொள்ளவேண்டும். சிறுபான்மையினருக்கு நடக்கும் அநீதியை தட்டிக்கேட்க வக்கில்லாத அஸ்வர் போன்றவர்களிடம் யாரும் எந்தக்கேள்வியும் கேட்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உள்நோக்கம். இதனால் தான் அஸ்வர் போன்றவர்கள் பொது ஊடகங்களுக்கு முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள். இவர்களின் கூக்குரல் பாராளுமன்றத்தில் மட்டுமே கேட்கமுடியுமே தவிர வெளியில் பொதுமக்களிடம் கோழைகளாகவே தென்படுகிறார்கள்.
ReplyDeleteசிறுபான்மையினருக்கு ஆதரவாக குறல்கொடுக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு எங்களின் ஆதரவு என்றும் நல்கும்.
உங்களின் பெருந்தன்மையை பாராட்டுகிறோம்.
ReplyDeletegood
ReplyDeleteஐயா மனோகனேசனே! எப்படி சுகமா? அனாதரவான சிறுபான்மை மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் நீங்களும் சிறிரங்காவும் சேர்ந்து செய்யும் உழைப்பு உண்மையுல் மெச்சத்தக்கது, நன்றிக்கடனாக அதற்கு வார்தைகளே இல்லை. நீடூலிகாலம் நீங்கல் இருவரும் வாழ்க. எதிர்காலத்தில் சகோதர முஸ்லிம் பிரதேசங்களிலும் உங்களின் சார்பில்/தலைமத்துவத்தில் இருந்து கேட்கப்படும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றிகிட்டும். உங்களின் மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக. இன்று திரு மாங்கல்யம் அஸ்வர் உட்பட அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளிடமிருந்தும் முஸ்லிம் மக்கள் அதிருப்தியைதான் பெற்றுள்ளார்கள் என்பதே இதற்குக்காரணம்.
ReplyDelete