Header Ads



பொத்துவில் முஸ்லிம் விவசாயிகள் தமது காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும்

(எம்.எம்.ஏ.ஸமட்)

பொத்துவில் முஸ்லிம் விவசாயிகள் தங்களது காணிகளில் விவசாயம் செய்வதற்கான அனுமதி  உடன் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.   இவ்வாறு செவாய்க்கிழமை(8) திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண, கல்வி, கலாசாரம், காணி அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை  வேண்டுகோள் விடுத்தார்.

அவர் அக்கூட்டத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 30 வருடங்கள் கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொத்துவில் பிரதேச முஸ்லிம்களின் விவசாயக் காணிகள் விவசாயம் செய்யபடாது கைவிடப்பட்டிருந்தது.
இருப்பினும், ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விடக்கிலும் கிழக்கும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையைத் இன்று தோற்றிவித்துள்ளது. இந்நிலையில் அம்பாறையின் பொத்துவிலிலும் திருகோமலையின் புல்மோட்டையிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் கபளிகரம் செய்யபடுகிறது. இது தடுக்கப்படுவது அவசியம்.
ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்த பொத்துவில் பிரதேச முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் இன்று வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமனக் கூறி இக்காணிகளில் பொத்துவில் மக்கள் விவசாயம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாகாண சபை ஆட்சியின் போது முன்னால் முதலமைச்சர் சந்திரக்காந்தன் மற்றும் அமைச்சர் விமல வீர திஸ்ஸநாயக்க உட்பட நாங்கள் அனைவரும் இணைந்து இம்மாகாணத்தில் அனைத்து இன மக்களினதும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் பல தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். குறிப்பாக தற்போதைய காணி அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சர் விமல வீர திஸ்ஸநாயக்கவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனேன்
பொத்துவில் பிரதேச மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்பொருட்டு மாகாணக் காணி அபிவிருத்தி அமைச்சினால் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது, அந்நடமாடும் சேவையில் எடுக்கபட்ட முடிவுகள் சரியாக நடமுறைப்படுத்தப்படவில்லை. 
தங்களின் வாழ்வதாரத்திற்குரிய காணிகளில் விவாயம் செய்ய முடியாத நிலை தொடர்வதனால் பலர் அவற்றi நினைத்து நினைத்து நோயாளிகளாக மாறிவருகின்றனர். இன்றும் சிலர் நோய் காரணமாக வைத்தியசாரலகளின் கட்டில்களுக்குச் சொந்தக் காரர்களாக மாறிவிட்டனர். ஆவர்கள் இவ்வுலக்கு பிரியாவிடையளிக்குமுன்னமாவது மனிதாபிமானத்துடன் உரியவர்களின் காணிகளை வழங்க காணி அமைச்சும் திணைகளமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் இன, மொழி வேறுபாடுகளை மறந்து தங்களது கடமைகளை நீதியாகவும் நேர்மையாகவும் செய்து பொத்துவில்  முஸ்லிம் விவசாயிகளின்  காணிப்பிரச்சினைக்கு உடன் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்பான அவசர நடவடிக்கைகைள முன்னெடுத்து அவர்களின் அவல நிலைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன.
அதேபோன்று புல்மோட்டைப் பிரதேச முஸ்லிம்களின் குடியிருப்பக்காணிகள் இராணத்தினரின் தேவைக்காக கையாடப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்புக் கருதி அக்காணிகள் பெறப்பட்டிருந்தாலும் அந்த ஏழை மக்களின் குடியிருப்புக்கு மாற்று வழி செய்யப்பட்டிருக்க வேண்டும். 
அதுமாத்திரமின்றி, அக்காணி கையாடப்படுவது கிழக்கு மாகாணத்தின் காணி அமைச்சுக்கோ அல்லது காணித்திணைக்களத்திற்கோ அறிவிக்கப்படாமல் அக்காணி இராணவத் தேவைக்காக கையாடப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். நிம்மதியாக வாழ்வதற்கு வாழ்வாதாரமும் குடியிருப்பும் அவசியம். இவ்விரண்டிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படும் போது எவ்வகையான அமைதியச் சூழல் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளம் அமைதி பெறாது.
எனவே பாதிக்கப்பட்டுள்ள புல்மோட்டை மற்றும் பொத்துவில் பிரதேச முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைக்கு இந்த மாகாண சபை மூலம்  தீர்வைப் பெறுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள முன்னெடுக்கப்பட வேண்டும் என உருக்கமாக வேண்டுவதாக அமைச்சர் உதுமாலெப்பை வேண்டுகோள்வித்தார்.;



No comments

Powered by Blogger.