தகைமையுள்ள ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
(எம்.எம்.ஏ. ஸமட்)
ஊடகவியலாளர்கள் உயர் கற்கை நெறிகளை மேற்கொள்ள ஊடக அமைச்சு நிதி உதவி வழங்கவுள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் தகைமையுள்ள ஊடகவியலாளர்களிடமிருந்து அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
மகிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் தங்களது தொழில்வாண்மைத் திறனை விருத்தி செய்வதற்காக கடந்த சில வருடங்களாக ஊடக அமைச்சு நிதி உதவி வழங்கி வருகிறது.
இந்நிதி உதவியினூடாக அரச உள்ளுர் பல்கலைக்கழங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்கள் என்பவற்றில் தொழில்வாண்மை விருத்திக்கான பட்டதாரி கற்கை நெறிகள், நீண்ட கால மற்றும் குறுகிய கால டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகளை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ள முடியும்.
இந்நிதி உதவியினைப் பெற விரும்பும் ஊடகவியலாளர்கள் அமைச்சினால் கோரப்பட்டுள்ள தகைமையைக் கொண்டிருப்பது அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, விண்ணப்பதாரிகள், அரச மற்றும் தனியார் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர 3 வருட சேவையைப் பூர்த்தி செய்திருப்பதோடு அரச தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களாக இருத்தல் அவசியம்.
அத்துடன,; 18க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாகவும் தற்போது கற்கை நெறிக்காக அரச உள்ளுர் பல்கலைக்கழங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் தற்போது கற்கை நெறியை தொடர்வதற்காக பதிவு செய்திருத்தல் வேண்டுமெனவும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கற்கை நெறியானது 2013ஆம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படக் கூடிய கற்கை நெறியாக இருத்தல் அவசியமெனவும் ஊடக அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. இந்நிபந்தனைகள் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் பொறுந்தக் கூடியது.
மேலும், அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்படும் நேர்முகத் தெரிவுக் குழுவினால் நிதி உதவி வழங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று தகைமையானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என ஊடக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுக்கான மேலதிக செயலாளர், 163, கிரிலபோன் மாவத்தை பொல்கென்கொட, கொழும்பு 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
.jpg)
Post a Comment