Header Ads



புதிய மாகாண அமைச்சர்களும் பதவிகளும் (விபரம் இணைப்பு)


வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான முதலமைச்சர் மற்றும் புதிய மாகாண அமைச்சர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில், இன்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும், வட மேல் மாகாண முதலமைச்சராக தயாசிரி ஜயசேகரவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

நிதி, சட்டம், சமாதானம், உள்ளுராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனித வளம், கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலா, காணி, வர்த்தகம் மற்றும் வாணிபம், உணவு வழங்கும் விநியோகம் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண தேசிய சுகாதார, சமூகநலன்புரி மற்றும் பராமரிப்பு, சிறுவர் பாதுகாப்பு சேவை அமைச்சராக டி.எஸ். பண்டாரயாலேகம சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ராமசாமி முத்தையா மத்திய மாகாண விவசாய, சிறிய நிர்ப்பாசனம், கமநல, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றாடல், இந்து கலாசார நடவடிக்கை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், ஆகிய துறைகளின் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சக்தி மற்றும் எரிசக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக எதிரிவீர வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரமித்த பண்டார தென்னக்கோன், மத்திய மாகாண விளையாட்டு இளைஞர் நடவடிக்கை, மகளீர் நடவடிக்கை, கிராமிய அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர நிதி, சட்டம் மற்றும் சமாதானம், உள்ளுராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனித வளம், கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைகள், காணி, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு வழங்கும் விநியோகம் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் அபிவிருத்தி, சிறிய நீர்ப்பாசன மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சராக கே. சனத் நிசாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக குணதாச தெஹிகம சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

எச்.எம். தர்மசிரி பண்டார ஹேரத், வடமேல் மாகாண சுகாதார தேசிய மருத்துவம், விளையாட்டு, இளைஞர் விவகார நடவடிக்கை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.