Header Ads



யாழ்ப்பாணத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் - அஸ்மின் அய்யூப் (பைஅத்) செய்தார்


(பா.சிகான்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் முஸ்லீம் வட்டார செயலணி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் வரவேற்பும் அறிமுக நிகழ்வும் 11-010-2013 வெள்ளியன்று மாலை 4 மணிக்கு சின்னப்பள்ளிவாசல் வளாகத்தில்  நடைபெற்றது.

இதன்போது  தற்போது வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள அஸ்மீன் அய்யூப்   பொதுமக்களால் வரவேற்கப்பட்டார். இவருடன் மாகாண சபை தேர்தலில் அஸ்மீன் அய்யூப்பை களமிறக்கிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தனது அறிமுகத்தினை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தது.

இந்நிகழ்விற்கு எம்.எம்.எம். நிபாஹிர் தலைமை வகித்ததுடன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூரா சபை உறுப்பினர் பிர்தௌஸ்,  நீதிக்கும் சமத்துவத்திற்குமான முன்னணி தலைவர் நஜா முஹம்மத், மஸ்ஜித் முஹம்மதியா நிர்வாக சபை உறுப்பினர் தாஹிர் ஆகியோர்  உரைகளை நிகழ்த்தினர்.

இறுதியாக சின்னப்பள்ளிவாசலில் பொதுமக்கள் முன்றலில் மாகாண சபை உறுப்பினராக அஷ்மீன் அய்யூப்  சத்தியப்பிரமாணம் (பைஅத்) செய்து கொண்டதுடன் அங்கு சிறப்புரையையும் நிகழ்த்தினார். பொதுமக்கள் அவருடன் முஷாபகா செய்து விடைபெற்றதை காணமுடிந்தது. 







No comments

Powered by Blogger.