ஜனாதிபதிக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் - சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர்
(யு .எல்.எம். றியாஸ்)
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தை உள்ளடக்கிய தாகநடாத்தப்படும்
வருடாந்த சமூர்த்தி வர்த்தக கண்காட்சி 2013 இம்முறை சம்மாந்துறையில் இடம்பெற்றது.
இன்று (26.10.2013) சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ,மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தை திறந்து வைத்தார் .
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தை உள்ளடக்கிய 28 சமூர்த்தி
வங்கிகளின் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் இக் கண்காட்சியில்
இடம்பெற்றிருந்தன இதன் மூலம் சமூர்த்தி உற்பத்தியாளர்களின் உற்பத்திப்
பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில்
இச் சமூர்த்தி வர்த்தக கண்காட்சி இடம்பெற்று வருகின்றது
இக்கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டுதலில் மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த சமூர்த்தி திட்டமானது மக்களின் வாழ்வாதாரத்தை சிறப்பாக திட்டமிட்டு நடாத்த வழிவகுத்துள்ளது அந்த வகையில் நாம் ஜனாதிபதிக்கி நன்றிக்கடன் பட்டுள்ளோம் .
இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான கூட்டுறவுச்சங்கங்கள் பாரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிரிக்கின்றது அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதை கட்டி எழுப்பும் பாரிய பொறுப்பு எனக்கிரிக்கிறது இது விடயம் தொடர்பாக நான் தற்பொழுது எனது உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.
அந்த வகையில் சம்மாந்துறைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கமும் பாரிய நஷ்டத்தில் இன்று இயங்கிக் கொண்டு வருகின்றதை நாம் அறிவோம் அதை சீர் செய்யும் நோக்கில் ஒரு சிறந்த படித்த முகாமைத்துவ குழுவை நியமிக்க அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் முற்பட்டபோது அதை புறந்தள்ளி விட்டு ஒரு குழுவினர் இன்று கூட்டுறவுச் சங்கத்தை பொறுப்பெடுத்து நடாத்த முன் வந்துள்ளார்கள் இவர்களால் அமைச்சரை புறந்தள்ளி விட்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என உரையாற்றினார்.
இந்நிகழ்வின் போது சமூர்த்தி நன்மை பெரும் பயனாளிகளுள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான திரிய பியஸ வீட்டுக்கான கடிதம் வழங்கி
வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான சிப் தொற புலமைப்
பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் கடந்த 2012ம் ஆண்டின்
கண்காட்சியில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான
சான்றிதள்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட உதவி சமூர்த்தி ஆணையாளர் அனுருத்த பியதாச, அம்பாறை மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ஏ,அலியார், உள்ளூராட்சி மற்றும் மாகான சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதவுல்லாவின் . இணைப்புச் செயலாளர் ஏ,பி.தாவூத்,அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ,ராசி, மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ, நசீர், மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment