பொத்துவிலில் நடைபெற்ற சர்வதேச ஆசிரியர் தினம் பற்றிய ஓர் பார்வை
(ஹாலு ஹம்தா,BA.Honos)
இருபதாம் நூற்றாண்டில் பல நாடுகளில் பல்வேறு நிகழ்வுகளையும், நபர்களையும், அவர்களின் கல்விச்செயற்பாடுகளையும் ஞாபகப்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு நாளே ஆசிரியர் தினமாகும்.
இத்தினமும், அத்தினத்தில் நடைபெரும் நிகழ்வுகளும் நாடுகளுக்கு மத்தியில் வித்தியாசப்படுகின்றன. Domingo Faustino Sarmiento செய்த சேவையினை கெளரவிப்பதற்காக ஆஜன்டீனாவில் செப்டம்பர் 11ம் திகதியில், அல்பானியாவில் மதச்சார்பற்றவர்களின் முதலாவது பாடசாலை நிருவப்பட்ட மார்ச் 07ம் திகதியில், இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி Dr. Sarvepalli Radhakrishnan யின் பிறந்த நாளான செப்டம்பர் 05 லும், புரூனை தாருஸ்ஸலாமில் அதன் 28வது மன்னர் Sultan Omar Ali Saifuddien III வின் பிறந்த நாளான செப்டம்பர் 23லும், கொலம்பியாவில் San Juan Bautista de la Salle என்ற ஆசிரயர் ஆசிரியர்கலுக்கு முன்மாதிரியானவர் என்ற பட்டத்தை பெற்றுக்கொண்ட நாளான மே மாதம் 15லும்,ஈரானில் Abulhassan Khan'ali என்ற ஆசிரியர் சுட்டு கொலை செய்யப்பட்ட நாளான மே 02லும்,1994 ம் ஆண்டு UNESCO சர்வதேச ஆசிரியர் தினம் ஒக்டோபர் 05 என பிரகடனம் செய்ததன் பின்னர் Estonia, United Kingdom, Serbia, Russia, Russia, Kuwait, Philippines, Pakistan, Netherlands, Republic of Moldova, Mauritius, Maldives, Macedonia, Lithuania, Estonia, Germany, Canada, Cameroon, Bulgaria, Azerbaijan, Afghanistan போன்ற நாடுகளில் ஒக்டோபர் 05 ல் ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றன. தங்கள் நாட்டின் பண்பாட்டு கலாச்சார அடிப்படையில் சாதனை படைத்த ஆசிரியர்கள் மாணவர்களாள் கெளரவிக்கப்படுவது வழக்கமாகும்.
சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு பிரத்தியோக கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், பாடசாலைகள் மற்றும் மாணவ சமூகத்தை சேர்ந்தவர்களால் ஆசிரியர்களும், ஆசிரியர்களாக கடமை புரிந்தவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
கல்விச்செயற்பாட்டில் சாதனை புரிந்த ஆசிரியர்களையும், கல்வி வளர்சிக்கு தன்னை உரமாக்கியவர்களையும் கெளரவிப்பதற்காகவே பல நாடுகள் ஆசிரியர் தினத்தினை கொண்டாடுகின்றன. பொத்துவில் பிரதேசத்தில் ஆசிரியர்களாக இருந்த, இருக்கும் பல ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளாக இருந்தவர்களும் பொண்னாடை போர்தி கெளரவிக்கப்பட்டார்கள். எதற்காக இவர்கள் கெளவிக்கப்பட்டார்கள்?, ஆர்பாட்டங்கள் மேற்கொண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை,அதிகமான பாடசாலைகளில் குறிப்பிட்ட பாடங்களை போதிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை, போதிய தலபாட வசதிகள் இல்லை, தகமை உள்ள மாணவச்செல்வங்கள் இருந்தும்; உயர்தர கணிதம், விஞ்ஞானப்பிரிவுகள் ஒழுங்கான கட்டமைப்பில் இன்மையால் ஊரைவிட்டு போகும் அவல நிலை போன்ற பல்வேறு பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்தார்கள் அதற்காக கெளரவிக்கப்பட்டார்களா?.
உன் சகோதரனும் எனது கல்வி நிலையத்திற்கு பிரத்தியேக பாடத்திற்கு வர வேண்டும், இல்லையாயின் நீரும் உன் சகோதரர் செல்லும் இடத்திற்கு போகவேண்டும்; என்று கூறும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் தினம் கொண்டாடியதையும், பிரத்தியோக பாடத்திற்கு பிறிதோர் ஆசிரியரிடத்தில் சென்றதால் பாடசாலையில் வகுப்பறையை விட்டு குறித்த மாணவனை துரத்திவிடும் ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டதையும், நான் பூரிப்போடு பார்கின்றேன்.
ஆசியர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது, கல்வி வளர்சியல் சாதனை புரிந்தவர்கள், புரிபவர்கள், மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியவர்கள், உருவாக்குபவர்கள் நினைவு படுத்தப்பட வேண்டும். அவர்களின் சாதனைகள், சேவைகள் பேசப்பட வேண்டும்; இதன் ஊடாக தலைசிறந்த ஆசான்களும், கல்விச்செயற்பாட்டாளர்களும் உருவாக வேண்டும், கல்வியை காசுக்காக விற்கும் ஆசிரிய சமூகம் மாறவேண்டும், என்பதற்காகவே; என நான் பார்கின்றேன்.
எதிர்வரும் காலங்களில் தலை சிரந்த, முன்மாதிரியான ஆசான்களாக நாம் மலர்வோம்.
.jpg)
Post a Comment