Header Ads



கரங்களை ஏந்துவோம்..


(முனையூர் ஏ. ஸமட்)

ஓங்கி ஒலிக்கும்
'தக்பீர் ஓசையும்
பள்ளிப் பேருரைகளும்
நம் இதயங்களில்
புத்துணர்வையும்
புரிந்துணர்வையும்
புகுத்திட வேண்டும்.
இத்தியாகத் திருநாளினிலே

சகோதர நெஞ்சங்களிலே
வேதனைச் சுடர் ஏற்றிடும்
ஜீவன்களின்
இதயப் பரப்புக்களில்
மனித நேயம்
பிறந்திட
ஏக நாயகன்
அருள் செய்திட வேண்டும்.
இத்தியாகத் திருநாளினிலே

கண்ணீரிலே காலம்
கடத்திப்போகும்
ஏழைக் கண்ணியர் வாழ்வு
வளம் வெற்றிட
வல்ல இறைவன்
துணை புரிந்திட வேண்டும்
இத்தியாகத் திருநாளினிலே

அகதியெனும் நாமம் சூடி
இன்னல்களால் அல்லலுரும்
உடன்பெற உறவுகள்
நிரந்தர மனைகளில்
நிம்மதியுடன் வாழ்ந்திட
படைத்தவன் உதவிட வேண்டும்.
இத்தியாகத் திருநாளினிலே

முஸ்லிம் உலகின்
போர் பிசாசுகளின்
யுத்த வேட்கையினாலே
மண்ணும்
மனித குலமும்
மனித நேச
வாயில்லா ஜீவன்களும்
அழிந்திடாதது
படைத்தவன் காத்திட வேண்டும்.
இத்தியாகத் திருநாளினிலே
சமூகங்களின்
உள்ளங்களினிலே
ஓற்றுமையுணர்வு 
விருட்சமாகி வளர்ந்திட வேண்டும்
பிரிவினை பாகுபாடடென்ற
வேர்கள் செத்திட வேண்டும்.
அவைகளினாலே
சமாதான நிம்மதி நிழல்
நிலைத்திட வேண்டும்.
அதற்காய்
இத்தியாகத் திருநாளினிலே
ஏந்துவோம் நம் கரங்களை
வல்ல அல்லாஹ்விடம்........
.

No comments

Powered by Blogger.