Header Ads



அரசாங்கம் தவறான வழியில் செல்ல இடமளிக்க முடியாது - ஹெல உறுமய

(Nf) அரசாங்கம் தாம் உருவாக்கிய பிள்ளை என்பதால் அது தவறான வழியில் செல்வதற்கு இடமளிக்க முடியாது என ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பிரதிச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
ஹோமாகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.
கெசினோ விவகாரத்தில் ஹெல உறுமய கட்சியும் அரசாங்கமும் முரண்படுவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இது நாம் உருவாக்கிய அரசாங்கம் என்பதாலேயே அந்த நடவடிக்கையை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காதவர்களே பெரும்பாலும் தற்போது அமைச்சரவையில் இருப்பதாகவும், ''இந்த அரசாங்கம் எமது பிள்ளையை போன்றது. ஆகையால் அது தவறான வழியில் செல்வதற்கு இடமளிக்க முடியாது'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சரி பிழைகளை சுட்டிக் காட்ட எதிர்க்கட்சியொன்று இல்லாமல் போயுள்ளது. ஆகையால் இன்று நாமே அந்த கடமையையும் நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஒருவரின் கருத்துக்கு உதய கம்மன்பிலவின் பதில்
உதய கம்மன்பில:-
''கசிப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என அரசாங்கத்திலுள்ள அமைச்சர் ஒருவர் கூறுகின்றார். சுற்றுலாப் பயணிகள் வந்தால் 10 வருடங்களில் இந்த நாட்டை மேம்படுத்த முடியும் என்பதால் இங்கு சிறுவர் பாலியல் தொழிலை சட்டமாக்குவோம் எனவும் இன்னும் சில நாட்களில் அவர் கூறலாம்''.

No comments

Powered by Blogger.