தியாகத் திருநாளில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துச் செயற்படுவோம்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
தியாகத் திருநாளில் தியாக உணர்வுடன் செயற்படும்போதே அந்த நாளின் சிறப்பைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்று அதிகமான முஸ்லிம்களிடம் தியாக உணர்வுகள் குறைவாக அல்லது அதனை விளங்கிக் கொள்ளாத தன்மைகளே அதிகம் காப்படுகின்றது.
இஸ்லாம் உண்மையாதும் புனிதமானதுமான ஒரு மார்க்கமாகும் அதனை உரிய முறையில் விளங்கிக் கொண்டே முஸ்லிம்களாகிய நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் இன்று அந்தத் தன்மைகள் மற்றய சமுகத்தின் பெருநாள் கொண்டாட்டங்களைப்போல் கேளிக்கைகளிலும், வீண் விளையாட்டுக்களிலும் அந்தப் புனிதமான தினத்தை கழிப்பதையே காணக் கூடியதாகவுள்ளது.
இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான புனிதமான மார்க்கமாகும் இந்த மார்க்கம் மற்றய மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்காது அவர்களின் மத மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதையே இஸ்லாம் வழியுறுத்துகின்றது. இந்தவகையில் இஸ்லாம்; எப்படியும் வாழலாம் என்பதற்கு மாற்றமாக இப்படித்தான் வாழவேண்டும் என்று வழியுறுத்தியுள்ளது.
ஆனால் இன்று பெருநாட்கள் வந்துவிட்டால் பல முஸ்லிம் சகோதர்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவதுடன் பெருநாளை எவ்வளவு சிறப்பாக அதாவது கேளிக்கைகளில் கொண்டாடுவதையே முனைப்பாக கொண்டுள்ளனர்.
இஸ்லாம் கேளிக்கைகளை வெறுக்கின்றது மாறாக மற்றய சமுகத்தினருடன் இணைந்து அவர்களின் நலன்களில் பாதிப்புக்கள் ஏற்படாத வன்னம் தமது சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறே வழியுறுத்துகின்றது.
இஸ்லாமியக் கொள்கைகளை குறைந்த பட்சம் பொருநாட்கள் மற்றும் முக்கிய சமய தினங்களிலாவது கடைப்பிடிக்கவேண்டும். அப்போது தான் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் சச்ரவுகளில் இருந்து விடுபட முடியும் மாறாக தாம் நினைத்தபடி நடந்து கொள்வதனால் மற்றய சமுகம் இஸ்லாத்தை பற்றி கீழ்த்தரமாக நினைக்கவும் அதனை கொச்சைப்படுத்தவுமே வழிவகுக்கும் இதனால் இயல்பற்ற நிலைமைகளை தோன்றும்.
முஸ்லிம்களைப் பொருத்தவரையில் இலங்கை போன்ற நாடுகளில் மற்றய பெரும்பான்மை சமுகத்திற்குள் சிறுபான்மையாக வாழ்பவர்களாகும். இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு எமது சமயக் கடமைகளை மிக அவதானத்துடன் மேற்கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் ஏனைய சமுக மக்கள் அதிகமாக செறிந்து வாழ்வதால் எமது சமயக் கடமைகளை மற்றவர்களின் வெறுப்புகளுக்கு இடங் கொடுத்துவிடாது செயற்படுவதே சிறந்தது.
முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் ஹஜ் பெரநாள் தொழுகையின் பின்னர் குர்பான் எனும் கடமையை வழமையாக நிறைவேற்றுவது வழக்கம் இது ஹஜ்ஜின் தாற்பரியங்களில் உள்ள ஒரு விடயமாகும் இந்த விடயத்தில் இலங்கை போன்ற நாடுகளில் அதிகமாக மாற்றுமத சமயத்தவர்கள் வாழும் பகுதிகளில் குர்பான கொடுக்கும் விடயத்தில் அதீத கவனஞ் செலுத்தி அவர்களுக்கும் அவர்களின் சமயங்களுக்கும் இடஞ்சல்கள் எற்படாத வகையில் நடந்து கொள்வது மிக மிக அவசியமானதாகும் என்பதனை முஸ்லிம் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதேபோல் நகர்ப்புறங்களில் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் விடயத்தில் பெற்றோர்கள் அதி முக்கிய கவனஞ் செலுத்தவேண்டும். இவர்களால்தான் பல நகர்ப்புற இடங்களில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
கொழும்பு போன்ற பகுதிகளில் பெருநாள் தினங்களில் பள்ளிவாசல்களுக்கு அருகாமையில் பெட்டிக் கடைகளும், தேனீர்க் கடைகளும் போடப்பட்டு கேளிக்கைகளும் அமைதியின்மையும் ஏற்பட்டு வரும் நிலைமைகளே அதிகம் காணப்படுகின்றது.
மேற்படிச் செயற்பாடுகளால் பெருநாள் தினங்களில் மற்றவர்கள் மேற் கொள்ளவேண்டிய சமயக் கடமைகளுக்கு முற்றிலும் இழுக்குகளை ஏற்படுத்துவதாகவும் அவர்களின் கவனத்தை திசைதிருப்புவதாகவுமே அமைகின்றன. பெண்கள் பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வரும்போது பள்ளிவாசல்களுக்கு அருகில் கூட்டம் கூட்டமாக நின்று கேளிக்கைகளில் ஈடுபடல் மற்றும் பெருநாள் கடைகள் போடப்பட்டு அந்த இடங்களில் நின்று கொண்டு ஆரவாரம் செய்தல் என்பனவெல்லாம் நகர்ப்புறங்களில் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றது எனவே இந்த விடயத்தில் நகர்ப்புற பள்ளவாசல்களின் நம்பிக்கையாளர்கள் அல்லது பள்ளிவாசல்களின் பொறுப்புதாரிகள் மிகுந்த கவனம் எடுப்பதோடு பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் விடயத்தில் பெருநாள் தினங்களிலாவது கவனஞ் செலுத்தவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
பல இடங்களில் பள்ளி நிருவாகங்கள் இந்த விடயங்களில் கவனஞ் செலுத்துவதில்லை இதன் காரணமாக பள்ளிக்கு வருபவர்கள் அந்தப் புனித தினத்தில் இச்செயற்பாடுகளுக்கு பதுவாச் செய்துவிட்டுச் செல்லும் நிலைமைகளே அதிகம் காணப்படுகின்றது.
எனவே இஸ்லாமியர்களாகிய நாங்கள் இஸ்லாமும் நபி ஸல் அவர்களும் காட்டிய வழிப்படி பெருநாள் தினங்களிலாவது சமயக் கடமைகளை நிறைவேற்றும் விடயத்தில் அவற்றை கடைப்பிடித்து செல்வதே மிகச் சிறந்தது.
தற்காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரான விஷமிகளால் பல்வேறுபட்ட விடயங்கள் மேற் கொள்ளப்பட்டு வரும் வேகைளில் புத்திசாலித் தனத்துடன் பெரியோர்களின் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடந்து கொள்ளும்போது நாம் பாதுகாப்புப் பெறுவதுடன் இஸ்லாத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எனவெ மேற்படி விடயங்களில் முஸ்லிம்களாகிய ஒவ்வொருவரும் மற்றய சமகத்திற்க மதிப்பளிப்பதுடன் இஸ்லாத்தின் கண்ணியத்திற்கும் மகிமைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எமது சமய விழுமியங்களை பாதகாக்க முயல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்.
.jpg)
Post a Comment