நீத்தை கிளுறு பிரதேசத்துக்கு நீர், மின்சாரம் வழங்கும் திட்டம்
நீத்தை கிளுறு நகர் பள்ளிவாயலின் தலைவர் எம்.ஐ.நூறுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு இத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசிக், பிரதேச செயலாளர் எம்.வை.சலீம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன், அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஜஃபர், இணைப்புச் செயலாளர் யூ.எல்.உவைஸ், மற்றும் திணைக்கள தலைவர்களும், அரச உயர் அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment